பாகிஸ்தானில் நிலநடுக்கம் பலியானோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!
பாகிஸ்தான் நாட்டு தென் மேற்கு மாகாணமான பலுசிஸ் தானை நேற்று தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் பலியா னோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக பலுசிஸ்தான் மாகாணத்தின் ஆவாரன் என்ற மாவட்டம் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. வீடுகள் அங்கு தரைமட்டமானதில் 200 பேர் பலியாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளில் மேலும் நூற்றுக் கணக்கானோர் சிக்கியுள்ளனர்.
மீட்பு படையினர் விரைந்துள்ளனர். ஆனாலும் அங்கு பலி எண்ணிக்கை அதிக மாகும் என்றே அஞ்சப்படுகிறது. உயிர் பலி எண்ணிக்கை விவகாரத்தில் உண்மை யான தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. அதிகாரபூர்வமாற்ற தகவல்கள் பலி எண்ணிக்கை 150ஐ தொட்டிருக்கும் என்று தெரிவிக்கிறது.
நேற்று மாலை 4 மணி 49 நிமிடத்தில் அடித்த இந்த பூகம்பத் திற்கு பிறகு 5 பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றன் அளவி 5.9 ரிக்டராகும். பூகம்பத் திற்கு பிறகு சுமார் 20 முதல் 40 நிமிடங்கள் வரை பின்னதிர்வுகள் குலுக்கியுள்ளது.
0 comments :
Post a Comment