சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்ற படகு விபத்து: 20 பேர் பலி
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் இதுவரை அதிகமான குழந்தைகள் உட்பட 20 சடலங்களை இந்தோனேசிய ஜாவா தீவு வாசிகள் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது படகில் 120 பேர் வரை இருந்ததாக தெரிவிக்கப்படுவதுடன் இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மீட்கப்பட்டவர்கள் ஜோர்தான், லெபனான், மற்றும் யேமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன் பயணித்த அனைவரும் மத்தியகிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment