Friday, September 13, 2013

நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றில் 2 கிலோ போதைப் பொருள்!!

கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்தி லிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்லும் விமான த்தில் பயணம் செய்ய வந்திருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் ணிடம் ஊழியர் ஒருவர் நீங்கள் எத்தனை மாதம் கர்ப்பமாக இருப்பதாக கேட்டார்.

இதனை கேட்டு திடீரென கோபமுற்ற அந்த பெண், ஊழியரிடம் சண்டையிட்டுவிட்டு, தான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தார். பெண்ணின் இந்த செயல் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

விசாரணை மேற்கொண்டப்போது, பெண் அதிகாரி ஒருவர் மூலம், அப்பெண்ணை சோதனை செய்து பார்க்க முடிவு செய்தனர்.அதன்படி, அப்பெண்ணை சோதனை செய்த அதிகாரி அப்பெண்ணின் வயிறு மிகவும் கடினமாகவும், அதேசமயம் குளிர்ந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

மருத்துவ சோதனையில், அப்பெண்ணின் வயிற்றில் 60 ஆயிரம் டாலர் மதிப்புடைய 2 கிலோ எடையுள்ள கொகைன் போதைப்பொருள், லாடெக்ஸ் பையில் போட்டு வயிற்றில் ஒட்டி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கோகைன் கடத்திய குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையின் முடிவில், அவருக்கு 5 முதல் 8 வருட சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment