இன்றைய தினம் 1500 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மகிந்த!
தேசிய சிறைக்கைதிகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்படு வதற்கிணங்க சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய தண்டப் பணம் செலுத்த முடியாமல் சிறையிலுள்ள கைதிகள் 1500 பேர், இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட அரச பொதுமன்னிப்பின்கீழ் அவர்கள் விடுவிக்கப்படவு ள்ளனர். சிறைக்கைதிகள் தற்போது அனுபவித்து வருகின்ற தண்டனைக்காலத்தை பரிசீலித்து, அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில் 70 வயதுக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளும், ஜனாதிபதியின் குறித்த பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 17 பேரை உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யும் தேசிய சிறைக்கைதிகள் தினம் உத்தியோகபூர்வமாக இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment