வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கு 142 பேரை தெரிவு செய்ய 43,58,263 பேர் வாக்களிப்பு!
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. மூன்று மாகாண சபை களிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவர் களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாவதுடன் மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக பத்து மாவட்டங்களிலும் 3612 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன் இம்முறை தேர்தல்கள் கடமைகளில் 40,000 அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இம்முறை மரத்திலான வாக்குப்பெட்டிக ளுக்குப் பதிலாக சில பகுதிகளில் பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் உபயோகப் படுத்தப்படவுள்ளன. இதற்கென வெளி நாட்டிலிருந்து 250 பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment