Thursday, August 29, 2013

TNA தலைவர்கள்மீதும் மண்டையன் குழு மீதும் சர்வதேச விசாரணை வேண்டும்! நவநீதம்பிள்ளையிடம் அருண் தம்பிமுத்து வேண்டுகோள் !

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து அவர்கள் நவநீதம்பிள்ளை அவர்களை திருகோணமலையில் சந்தித்து உரையாடினார். அவ்வுரையாடலின்போது இலங்கை சம்மந்தமான விசாரணையானது யுத்தத்தின் இறுதிப்பகுதியை மட்டும் கவனத்திற்கொள்ளாது கடந்த காலத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டார் .

அவர் மேலும் கூறுகையில் ,"2009 ஆம் ஆண்டு முடிவுற்ற யுத்தத்தின் யுத்தம் பற்றிய விசாரணையை வேண்டி நிற்போர் அதற்கு முன்னர் இடம்பெற்ற கொலைகள் ,ஆட்கடத்தல் ,சிறுவர்களை கட்டாயமாக படையில் சேர்த்தல் போன்ற அநியாயங்கள் நடந்துகொண்டிருந்த வேளை அதை முன்னின்று நடத்தியவர்களாகவும் அதற்கு துணை போனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களாக இருப்பவர்கள் 89-90 காலப்பகுதியில் தமிழ் தேசிய இராணுவத்திற்கு தலைமை தாங்கி புலிகளுக்கெதிரான யுத்தத்தை முன்னின்று நடாத்தி கல்விமான்கள் , பத்திரிகை ஆசிரியர்கள், பொது மக்கள் என எத்தனையோ உயிர்களை பலி எடுத்திருக்கிறார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்தை வழிநடத்தி எத்தனையோ உயிர் அழிவுக்கு காரணமாக இருந்தவர்கள் இப்போ தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களாக இருக்கின்றார்கள். நான்காவது ஈழப்போர் நடந்துகொண்டிர்ந்த காலகட்டத்தில் புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என கூறி அவர்களுடன் தேன்நிலவு நடாத்திய சம்மந்தன் ,விசாரணை கோரி நிற்பது நகைப்புக்கிடமானதாகும்.

வன்னி யுத்தத்தின் போது மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட வேளை வாய் மூடி மௌனிகளாக இருந்து அதற்கு துணைபோன தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். என்ன அடிப்படையில் யுத்த குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரித்தார்கள் ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

"மண்டையன் குழு " என்ற துணைக்குழுவிற்கு தலைமை தாங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் 89-90 காலப்பகுதியில் புலி உறுப்பினர்களை வெட்டியும் ,சுட்டும் ,உயிருடன் எரித்தும் கொன்று குவித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

5 comments :

Anonymous ,  August 29, 2013 at 8:17 PM  

An impartial inquiry is needed among all who involved in abductions and brutal killings.Srilankan forces cannot be responsible for all the atrocity

ஆர்யா ,  August 29, 2013 at 9:36 PM  

இவர் கூறியிருப்பது முற்றிலும் உண்மை, வட மாகாண தேர்தலில் போட்டியிடும் பலர் இதற்கு உதாரணம், இவர்களை முதலில் தண்டிக்க வேண்டும், இவர் கூறியிருப்பது முற்றிலும் உண்மை, வட மாகாண தேர்தலில் போட்டியிடும் பலர் இதற்கு உதாரணம், இவர்களை முதலில் தண்டிக்க வேண்டும், இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் ,சிவஞானமும் அவரை 1988- 1989 களில் சுடுவதுக்கு சந்தர்ப்பம் பார்த்து இருந்த விந்தனும் ஒரே கூட்டில் போட்டியிடுவது.

ஒரு பேச்சுக்கு புலிகள் போரில் வென்றிருந்தால் இந்தக்கூட்டம் யுத்தக் குற்றம் என்று கூச்சலிட்டு இருப்பார்களா ?

இந்த கூட்டம் கேட்பது போல் இலங்கை அரசு மீது தடை வந்தால் வட , கிழக்கில் உள்ளவர்கள் தான் அதிகம் பாதிக்கப் படுவார்கள், உப்பு தண்ணியை குடித்து விட்டு பனங்காயை சூப்பி போட்டு படுக்க வேண்டியதுதான் , அனால் புலன் பெயர் புலிகள் சகல சுகத்திடனும் வாழ்வார்.

ஈய ஈழ தேசியம் ,  August 30, 2013 at 7:10 AM  

உண்மையை உரக்க சொன்ன அருண் தம்பிமுத்துக்கு நன்றி.

Anonymous ,  August 30, 2013 at 12:02 PM  

The voters of the peninnsula know more than us,they have all the bitter and horrified experiences.DO NOT TRUST THE WOLVES IN SHEEP'S SKIN,
they will shed crocodile tears, they will make lot of promises, they even touch your boots by hands and beg for votes.
Please do vote for the best may be an individual or a raw hand and send them to provincial council AND NOT THE CUNNING FOXES AND WOLVES,If you
fail to do so you will enjoy the sorrowful results.

Anonymous ,  August 30, 2013 at 7:47 PM  

I had great respect for Sam and Kala Thambimuttu but disappointed with their son Arun Thambimuttu who is trying to take revenge for the loss of his parents from the wrong people by betraying the innocent Tamil civilians slaughtered by the racist SL Government. My advice to Arun Thambimuttu is to pack your bags and go to UK or somewhere and lead a peaceful life if you can’t help the victims of unjust war. You have already done enough damage to your community and remember, you can't bring back your dead parents to life, no matter what you do. But your current activities will only alienate you from your community and make you an enemy of humanity as a whole.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com