Sunday, August 4, 2013

புடீன் பொண்டேரா உற்பத்திகளுக்கு காலால் உதைக்கிறது ரஷ்யா!


நிவ்ஸிலாந்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பால்மாப் பொருட்களையும் தங்களது நாட்டுக்குள் தடை செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது என The New Zealand Herald செய்திப் பத்திரிகை குறிப்பிடுகிறது.

ரஷ்ய RIA செய்திச் சேவையிலிருந்து மேற்கோள் காட்டி Hareld செய்திச் சேவை, ரஷ்ய நுகர்வோர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் குழந்தைப் பால்மா உட்பட பொண்டேரா உற்பத்திகள் மீண்டும் திருப்பியனுப்பப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது. பெண்டேரா நிறுவன பணிப்பாளர்களில் ஒருவர் சென்றவருடம் குறிப்பிடுகையில் தமது உற்பத்திப் பொருட்களான பால்மா, சீஸ் பட்டர் உட்பட மில்லியன் 120 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ரஷ்யா கொள்வனவு செய்கிறது என்று குறிப்பிட்டார்.

உலகின் மிகப் பெரும் பால்மா உற்பத்தி நிறுவனமான நிவ்ஸிலாந்து பொண்டேரா நிறுவனத்தின் பால்மா உற்பத்தியில் பொட்யுலிம் எனும் (botulism) பயங்கர இரசாயன விஷப் பொருள் கலக்கபட்டுள்ளதை அறிந்து கொண்ட சீனா பொண்டேரா உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் தடை செய்திருந்தது.

பொண்டேரா நிறுவனம் இலங்கைச் சந்தைக்கு வழங்குகின்ற எங்கர், மெலிபன் உட்பட்ட உற்பத்திப் பொருட்களில் DCD விஷ இரசாயனப் பொருள் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போதும் இலங்கை எந்தவிதத் தடையும் விதிக்காமல் தொடர்ந்து அதனைச் சந்தைப்படுத்துகின்றது.

சுகாதார அதிகாரிகள் உட்பட இந்நாட்டில் பொறுப்புச் சொல்ல பகுதியினரும் கைத்தொழில் உற்பத்தி நிறுவன அறிக்கைகளை கண்டும் காணாது இருளில் தேடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னரும் விவசாய இரசாயனப் பொருளில் ஆசனிக் நஞ்சு அடங்கியுள்ளதாக களனிப் பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கையை நிராகரித்து, அரசாங்கம் சட்ட ரீதியாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI) வெளியிடுகின்ற அறிக்கையை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். ஆயினும் DCD தொடர்பிலான விடயம் மாற்றமடைந்துள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment