Monday, August 26, 2013

முன்னாள் ஜனாதிபதி மும்மர் அல் கடாபியின் திடுக்கிடும் பாலியல் கொடுமைகள்!

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர் பான புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த சிறுமிகளை அவர் பாலியல் அடிமை யாக வைத்திருந்தார் என்றும், தனது கோட்டைக்குக் கீழே அறை அமைத்து அவர்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததாகவும், Gaddafi's Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya என்ற தலைப்பிலான அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் இதை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த நூலில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள். கண்ணில் எந்த அழகான சிறுமி பட்டாலும் உடனே அவர்களைக் கடத்தி வருமாறு தனது மெய்ப்பாதுகாவலர்களுக்கு உத்தரவிடு வாராம் கடாபி. இவ்வாறு கடத்தி வரப்பட்டு சித்திரவதைக்குள்ளான ஒரு சிறுமிதான் சொரயா. இவருக்கு அப்போது 15 வயதாகும். ஐந்து வருடங்கள் இவரைச் சீரழிந்துள்ளார்.

தன்னை தினசரி கடாபி வல்லுறவுக்குட்படுத்தியதாக அவர் கூறியுள்ளார் அவர். மேலும் கடாபி மட்டுமல்லாமல் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் தன்னை இசைக்கு கட்டாயப்படுத்தி சீரழித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பள்ளிச் சிறுமிகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுத் தூதர்களின் மனைவிமார்கள், பிரபல பெண்மணிகள் என யாரையும் விட்டுவைக்கவில்லையாம் கடாபி. பெண் மெய்ப்பாதுகாவலர்களை தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக என்று கூறிய போதிலும் அவர்களையும் பாலியல் அடிமை போலவே நடத்தி வந்தாராம் கடாபி. அவர்களில் பலருக்கு துப்பாக்கியைப் பிடிக்கவே தெரியாதாம். ஒரு இலட்சம் பிரதிகள் இந்த நூல் தற்போது 1 லட்சம் பிரதிகள் விற்றுள்ளதாம்.

ஆங்கிலத்திலும் இது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாம். இதில் சொரயா போல பல சிறுமிகளின் கதையையும் கூறியுள்ளனர்.

3 comments :

தூது August 28, 2013 at 1:34 PM  

இந்த பாலியல் துஷ்பிரயோக செய்தியில் எந்தளவு உண்மை இருக்கின்றது என்று தெரியாது.

ஆயினும்,

2008ஆம் ஆண்டு என்னுடைய லிபிய விஜயத்தின்போது பொது மக்களிடம் இருந்து அறிந்துகொண்ட சில விடயங்களை முன்வைக்கின்றேன்:

கத்தாபி ஆட்சியின்போது லிபியாவில்:

1. வருமான வரி கிடையாது

2. தண்ணீர், மின்சார கட்டணம் கிடையாது

3. மருத்துவம் முற்றிலும் இலவசம் (அவசியமேட்படில், வெளிநாட்டில்)

4. கல்வி, வெளிநாட்டில் உயர் கல்வி ஆயினும், அரச செலவில்

5. வீடு கட்டுவதற்கு 50% அரச அன்பளிப்பு, மீதி 50% வட்டியற்ற நீண்ட கால வங்கிக்கடன்

6. திருமணத்தின்போது, 50,000 டொலர் அரச அன்பளிப்பு

7. புது வாகனம் வாங்குவதற்கு 50% அரச அன்பளிப்பு, மீதி 50% வட்டியற்ற நீண்ட கால வங்கிக்கடன்

8. பண்டிகைக் காலங்களில் வங்கிக் கணக்குகளில் கணிசமான ஒரு தொகை அரசால் வைப்பிலிடப்பட்டு லிபியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது.

இப்படி லிபியாவின் அபரிமிதமான தேசிய வருமானம் அந்நாட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இப்போது, அமெரிக்காவும், ஐரோப்பாவும் அதனை சுரண்டுகின்றன.

Anonymous ,  August 29, 2013 at 8:10 PM  

We do accept with the comments of Mr.Muzamil,he was a dictator, but the citizens were quite happy under his rule.Foreigners flooded into the country for employments.Sex stories about col.Gadaffi may a fabricated one by the west in order to divert the minds of the world.The present sufferings of Libyans are great example that Col.Gadaffi is no more with them.The country now regrets.

Anonymous ,  August 30, 2013 at 6:55 PM  

The world has many many cruel sex stories,we have already witnessed Col
Gadaffi cannot be a scape goat.There are intelligent guys to divert your mind into another direction.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com