தனது வீட்டில் உடைகளை இஸ்திரிக் செய்து கொண்டிருந்த தன்னுடைய 12 வயது மகள், இஸ்திரிக் செய்தவற்குத் தாமதமானதால் மின்னழுத்தியினால் சுட்டுக் காயப்படுத்திய இருபிள்ளைகளின் தந்தையை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை சிறையில் வைக்குமாறு
கேகாலை நீதிபதி விராஜ் ரணசிங்க ஆணையிட்டுள்ளார்.
மகள் உடைகளை இஸ்திரிக்செய்துகொண்டிருந்த மின்னழுத்தியைப் பறித்து, அவளது கையில் வைத்ததும் வலி தாங்கமுடியாமல் கதறியுள்ளதாகவும், அந்தக் கதறலைக் கேட்டு பக்கத்துவீட்டார் ஒருவர் உடனடியாக பொலிஸ் அவசரப் பிரிவினருடன் தொடர்பு கொண்டு மேற்படி விடயத்தை அறிவிக்கவே, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் கூறப்பட்டது.
இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளவர் கேகாலை இம்புல்கஸ்தெணிய வட்டாரன்கந்தையில் வசித்துவந்த வசந்த அத்துகோரல எனும் இருபிள்ளைகளின் தந்தையே.
மின்னழுத்தியினால் துன்புறுத்தப்படும் போது கதறிய சத்தம் கேட்டு 119 இலக்க தொலைபேசியுடன் தொடர்புகொண்டு பக்கத்துவீட்டார் கொடுத்த தகவலையடுத்தே இந்தச் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டையடுத்து எதிர்வரும் 14 ஆம் திகதிவரை சிறையில் வைக்குமாறு கேகாலை நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.
(கேஎப்)
May be he is the father of two children but he should be kept away from human,he doesn't have the human touch.Totally he doesn't know
ReplyDeletewhat is humane.The best place for him a cage and he needs hard
psychiatric treatments for years and years.