உதவியாளரை கட்டிவைத்துவிட்டு பெண் ஊடகவியலாளரை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்திய குழு!
இந்தியாவில் சஞ்சிகையொன்றில் ஊடகவியலாளராக கடமையாற்றும் பெண் ஒருவர் இந்தியாவில் குழுவொ ன்றினால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் எதிர்ப்பு அலை ஏற்ப்பட்டுள்ளது. சஞ்சிகையொன்றில் புகைப்படக் கலை ஞராக கடமையாற்றும் 23 வயது யுவதியே இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மும்பை நகரிற்கு அருகாமையிலுள்ள இடமொன்றில் தனது உதவியாளருடன் கடமைக்காக சென்ற போதே அவர் மோசமான சம்பவத்திற்கு முகம்கொடு த்துள்ளார். உதவியாளரை கட்டி வைத்த குழுவினர் பெண் புகைப்படக் கலைஞரை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளதாக மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் மும்பை நகரில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை பாதுகாப்பு தரப்பினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 9 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் புதுடில்லி நகரில் வைத்து 6 பேர் அடங்கிய குழுவால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். குறித்த மாணவி உயிரிழந்துள்ள நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதேபோன்றதொரு சம்பவம் இன்றைய தினம் மும்பையில் இடம்பெற்றுள்ளமை பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3 comments :
By India , Be India - This is India
India is well known to sexual violences criminal activities foreign tourists are frightened to go there,but it seems to be hysterically funny that they stretch their fingers into other countries about their discipline.
Don't be a mirror.
Wild fire can be controlled but the Indian sexual fire is the hardest matter to bring under control
Post a Comment