Wednesday, August 28, 2013

எமது இலக்கு எதிர்கால சந்ததியினரே – பசில்

சிறப்பான எதிர்காலம் ஒன்றை நாட்டு மக்களுக்கு எற்படு த்திக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக் கொடுப்பது அரசாங்கம் எதிர்கொண்ட பாரிய சவாலாகும். யுத்தம் அடியோடு நிறுத்தப்பட்டதன் பின்னர் அச்சவாலை அரசாங்கம் வெற்றி கொண்டு மக்களுக்கு பூரண சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

210 கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் செயல்த்திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்ட பாலங்கள் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்கால சந்ததியினர் நல்வாழ்வை இலக்கு வைத்தே அரசாங்கம் அனைத்து அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் இங்கு தொடர்ந்தும் தெரிவித்தார்.

திவிநெகும திட்டத்தின் கீழ் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் உதவியளிக்கின்றோம். சுய தொழில் முயற்சிக்கும் ஆதரவு அளிக்கின்றோம். வீட்டில் வருமானம் அதிகரித்தால் கிராமத்தின் வருமானமும் அதிகரிக்கும்.

கிராமங்களின் வருமானம் அதிகரிக்கும் போது நாட்டின் வருமானமும் அதிகரிக்கும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். அவ்வாறு நாடு பொருளாதார ரீதியில் வளமடையும் போது அந்நாடு எந்தவொரு நாட்டிற்கும் அடிப்பணியாமல் இறைமைமிக்க நாடாக மாறுவதுடன் அவ் இறைமைய பாதுகாக்கும் வல்லமையும் அந்நாட்டுக்கு உருவாகும் என தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி அமைச்சர் விஜய தஹநாயக்க உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment