Saturday, August 17, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களுடையது. அதை நாம் பதிவு செய்வோம்.

தமிழ் அரசியல் தலைவர்கள் பொய்யான நிலைப்பாட்டுடன் தமிழ்மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர் இவ்வாறான செயற்பாட்டை இனியும் நாங்கள் அனுமதிக்க முடியாது இதனால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பினராகிய நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான சத்தியாக மாற்றி தமிழ் மக்களின் அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளளோம்.

யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் தமிழ் அரசியல் தலைமைகள் மக்களின் பிரச்சனை சார்விடயங்களை விடுத்து சுயநல அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்திகொண்ட சிலர் எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்துள்ளனர். அத்துடன் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முதன்மை வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸவரன் நிறுத்தப்பட்மைக்கு கூட்டமைப்பில் உள்ள பலர் அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில் இவ்வாறானவர்களை ஒன்றினைத்து இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என நாங்கள் செயற்படவுள்ளோம்.

சில தமிழ் அரசியல் வாதிகள் அரசாங்த்திடம் இணைந்து கூட்டமைப்பை விற்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள் இதனைத் தடுப்பதற்காக போராரினால் பாதிக்கப்பட்ட மக்களும் தமிழ் தேசியப் பற்றார்களும் ஒன்றினைந்து தமிழ் தேசியகத்தைக் காக்க ஒன்றினைந்துள்ளார்கள்.

கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதனைப்பொருட்படுத்தாமல் தமிழ் மக்களை உறிஞ்சும் நடவடிக்கையில் சம்மந்தன் சுமந்திரன் போன்றவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிரசா நிறுத்தப்படவிட்டால் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது இது வெறும ஊடகச் செய்தியாக மாறிவிட்டது.

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அழையவிருந்தாளிகளாக ஆனந்தசங்கரியும் சித்தார்த்தனும் களமிறங்கியிருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் கூட்டணியை விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று கூறிவந்த சங்கரி இன்று தனது சூரியன் சின்னத்தை தூக்கி எறிந்துவிட்டு கூட்டமைப்பில் சரணகதியடைந்துள்ளார். அதேபோன்று வவுனியா மக்களால் தூக்கி எறியப்பட்ட சித்தார்தன் தமிழ் மக்களின் வாக்கை கவர்வதற்காக களத்தில் நிக்கிறார்கள் இவர்களின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த வங்கு றோத்து அரசியல் தொடர்பாக மக்களிற்கு விழிப்புனர்வை ஏற்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் ஒரு பலமான சத்தி இதனை இன்றிருக்கும் தலைமைகள் தங்கள் சுயநல அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றன. இதனை இனியும் அனுமதிக்க முடியாது எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயற்பட நாங்கள் செயற்பட தீர்மானித்துள்ளளோம் அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்து தமிழ் மக்களிற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.



1 comments :

Anonymous ,  August 17, 2013 at 8:36 PM  

A very colourful advertisement in order to attract the voters.Voters cannot be fools always.We are sure the experience will make the voters to make
a decisive decision which could bring peace and prosperity to Jaffna peninsula.Politics cannot be cinema .Cinema needs colourful posters.politics needs no colurful
postters,but it needs the higher quality,sensible,intelligent,hardworking and sacrificing men and women as their leaders.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com