புதிய இராணுவ தளபதிக்கு தமிழ் மக்கள் சார்பில் தமிழ் தேசிய ஐக்கிய சபை வாழ்த்து தெரிவித்துள்ளது!
30 ஆண்டுகால யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், அப்பகுதிகளின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் புதிய ராணுவ தளபதி, அப்பகுதிகளில் மேற்கொண்ட விசேட பணிகளை பாராட்டியும், லெப்டி னன்ட் ஜெனரல் தயா ரட்னாயகவிற்கு, தமிழ் சமூகத்தினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கொழும்பில் இடம்பெற்ற பாராட்டு விழாவை, தமிழ் தேசிய ஐக்கிய சபை எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பாராட்டு விழாவிற்கு வருகை தந்த ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்னாயக, தமிழ் கலாசாரத்திற்கேற்ப வரவேற்கப்பட்டார்.
அப்போது தயா ரட்னாயக, வடபகுதி சிவில் விவகார இணைப்பாளராக செயற்பட்டு, மோதல்களில் சிக்குண்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டெடுப்பதற்கு பெரும் பணியாற்றியார். அத்துடன் அவர்களது மனோ நிலையை மேம்படுத்துவதற்கு, தயா ரட்னாயக, விசேட பணியாற்றியுள்ளார்.
விடுதலை புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதில் தயா ரட்னாயக, குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தியுள்ளார். அங்கு கருத்து தெரிவித்த தயா ரட்னாயக, இதுபோன்றதொரு பாராட்டு விழா, தமக்காக நடாத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென்றும், இதுபோன்றதொரு விழாவை ஏற்பாடு செய்தமைக் காக, தமிழ் மக்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
அமைப்பின் தலைவர் பீ. சுந்தரலிங்கம், செயலாளர் தேவநாயகம் ஈஸ்வரன் உட்பட சங்கத்தின் அதிகாரிகளும், உறுப்பினர்களும், இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment