பிரதேச சபை உறுப்பினரான தந்தையும் மகனும் கைது!
களுத்துறை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும் அவரது மகனும் களுத்துறை வடக்கிலுள்ள வீடொன்றிற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை காரணமாக இருவர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஐதேக களுத்துறைப் பிரதேச சபை உறுப்பினர் காமினி கவிரத்ன மற்றும் அவரது மகனும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(02) பிற்பகல் களுத்துறை வஸ்கடுவ - குடாவஸ்கடுவ ரணவிரு மாவத்தைக்கு அருகாமையிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment