ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை முயற்சியில் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!
கொழும்பு பம்பலபிட்டி மிலாகிரிய டிக்மன் வீதியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை கொள்ளையிடச் சென்ற குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூன்று பொலிஸார் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
ஐந்துபேர் கொண்ட குழுவினர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்த பம்பலப்பிட்டி பொலிஸார் இந்தக் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது கொள்ளையர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோம் செய்யததாகவும் பதிலுக்கு பொலிசார் கொள்ளையர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கொள்ளையர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நான்கு கொள்ளையர்கள் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் கொள்ளையர் ஒருவரிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment