பொதுமக்கள் மீது அதிக அக்கறையோடு குரல் கொடுக்கின்ற, கிராமப் புற ஏழை மக்களின் துன்ப, துயரங்களை மாற்றியமைப்பதற்கு செயற்படுகின்ற, நட்புறவோடு செயற்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளை கட்டியெழுப்புவதற்கு இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்துமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச வாக்காளர்களைக் கேட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்திற்கு புத்தளம் மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன்ஸ்ரீ ஹேரத்தின் வெற்றியை நிச்சயிப்பதற்காக, ஹலாவத்தை ஷர்லி கொரயா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே விமல் வீரவங்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு கருத்துத் தெரிவித்த விமல் வீரவங்ச தொடர்ந்து உரையாற்றும் போது,
‘சென்ற நான்கு ஆண்டுகளும் இந்த நாட்டுக்கு எவ்வளவு முக்கியமான ஆண்டுகள் என்பது தங்களுக்கெல்லாம் நன்கு தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவுக்கு வந்தது. மிகவும் கஷ்டமான சவாலிலிருந்து இலங்கை வெற்றி கண்டது. அன்று முதல் இலங்கை முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று எல்லோரது உள்ளங்களுக்கும் தெரிகின்றது.
மனமொன்று இருக்குமென்றால், இந்நாட்டின் எந்தவொரு பகுதிக்குச் சென்றாலும் இந்நாட்டின் முன்னேறும், வளம் பெறும் என்பது பற்றி அது சொல்லும்.
யுத்தக் காலப் பகுதியில் நாங்கள் கேட்ட துரதிர்ஷ்டவசமான செய்திகள் இப்போது கேட்பதற்கு இல்லை. வெட்டிச் சாய்த்த, கொன்றொழித் செய்திகள் இன்று கேட்பதற்கு இல்லை. பஸ் வண்டி குண்டுத் தாக்குதலில் நொறுங்குண்ட செய்தி இன்று இல்லை.
இன்று முழு நாட்டிலும் பாதைகள் நவீனமயப்படுத்தப்பட்டு வருவது பற்றி உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும். அதிவேக வீதிகள் நாட்டுக்குக் கிடைத்துள்ளன. நான் இன்று இவ்விடத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற கட்டுநாயக்கா வரையிலான அதிவேக வீதியிலேயே. 15 முதல் 20 நிமிடங்களில் விமான நிலையத்திலிருந்து அவ்வீதி வழியே கொழும்புக்குச் செல்லலாம். அதுமட்டுமல்ல, கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான அதிவேக வீதி நிர்மாணப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பௌதீக ரீதியிலான தூர அளவைக் கடப்பதற்குச் செல்கின்ற கால அளவைக் குறைத்து, வடக்கில் உள்ளவர்களும் தெற்கில் உள்ளவர்களும் நட்புத்துவத்தை அதிகரிக்க வேண்டுமாயின் இந்தப் போக்குவரத்திலிருக்கின்ற சவாலை வெற்றி கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல. மின்னியல் நிலையம், பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கொழும்புத் துறைமுகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுதிக்குச் சென்று பாருங்கள். இலங்கைப் படத்திற்கு புதிதாக நிலப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. பல கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு கடலைத் தரைப்படுத்தி அந்தப் புதிய துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான குடும்பங்கள் அந்த துறைமுகத்தைக் கண்டு களித்து உள்ளார்ந்த ரீதியாக பூரிப்படைந்து செல்கிறார்கள். இந்நாடு வளர்ச்சியடையும்.
பாரிய பயங்கரவாதிகளான புலிப் பயங்கரவாதிகளினால் அடித்து நொறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட மூதேவித்தனச் செய்திகள், முஸ்லிம் பள்ளிவாசல்களை புலிப் பயங்கரவாதிகள் தாக்கிய செய்திகள், போதி மரத்தின் முன்னே பக்தர்கள் கொன்றொழிக்கப்பட்ட செய்திகள் இன்று கேட்பதற்கில்லை. அதற்குப் பதிலாக நாட்டை விருத்தி செய்கின்ற, முன்னேற வேண்டும் எனும் எண்ணப்பாட்டுடன் முன்னே செல்கின்ற ஒரு நாடே இன்று உள்ளது. அந்த முன்னேற்றப் பயணத்தை முறியடிக்க பல சக்திகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்நாட்டை சுமுகமாக வைத்துக் கொண்டு இன்னும் 10 ஆண்டுகள் சரிவர முன்னே சென்றால், இந்நாட்டை எந்தவொரு கொம்பனாலும் பின்தள்ள முடியவே முடியாது.
இன்று எங்கள் உள்நாட்டு உற்பத்திகள் மெல்ல மெல்ல முன்னேற்றம் காண்டு வருகின்றன. உல்லாசத்துறை, விவசாய உற்பத்தி போன்றவை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன.தொழிநுட்பத் துறைக்கு அதிக பாரத்தைச் செலுத்தி முன்னேறிச் செல்ல வேண்டியிருப்பதுதான் நாங்கள் எதிர்நோக்குகின்ற சவால். இந்த அனைத்து முன்னேற்றங்களும் இந்த நான்கு ஆண்டுகளினுள்ளேதான் நிகழ்ந்தன. சமாதானத்தின் மூலம் கிடைத்த வெற்றி வாய்ப்பு. இந்நிலையை மாற்றியமைப்பதற்கு பல தீய சக்திகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட மேற்கத்தேய ஏகாதிபத்திய சக்திகள் மட்டுமல்ல, இந்தியாவும் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டு எங்கள் பயணத்தை முறியடிப்பதற்காக காத்துநிற்கின்றன.
தொடரும்............
(கலைமகன் பைரூஸ்)
No comments:
Post a Comment