Monday, August 26, 2013

நவநீதன்பிள்ளையை பைசாவுக்கும் கணக்கெடுக்காமல்தான் ஜனாதிபதி பிறநாடு சென்றார்...!

நவநீதன்பிள்ளை இலங்கைக்கு வருகைதரும் போது, ஜனாதிபதி இந்நாட்டிலிருந்து வெளிநாடு சென்றது அவரை பைசாவுக்கும் கணக்கெடுப்பதில்லை என்பதைக் காட்டவே என்றும் அது அரசாங்கத்தின் மற்றொரு கூத்து மட்டுமே என்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடுகின்றனர்.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிடுகையில், சில திரைப்படங்களில் கதாநாயகர்கள் வில்லன் வரும்போது ஒழிந்து நிற்பதற்குக் காரணம் பின்னர் முகங்கொடுப்பதற்கே என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பின்னர், ஆசிரியத் தலையங்கங்களும், பத்தி எழுத்துக்களும் எழுதுவார்கள். புதியதொரு இலக்கியம் படைக்கலாம். ஆனால், இந்த விடயம் அரச தந்திர நடவடிக்கை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொடுக்கல் வாங்கலானது ‘அவரின் வைரம்’ எனும் தலைப்பிலான கூத்து மட்டுமே என்றும், இந்தக் கூத்து பற்றி பொதுமக்கள் தெளிவுற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பலத்தை அதிகரிப்பதற்காக செய்த சில நடவடிக்கைகளினால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவநீதன்பிள்ளை இங்கு வருகை தந்திருப்பது தகவல்கள் சேகரிப்பதற்காக நினைத்துக் கொண்டிருந்தாலும், இங்கு வருவதற்கு முன்னரேயே அவர் அனைத்து தகவல்களும் திரட்டியுள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையின் இந்த வருகையானது நமக்குத் தரும் படிப்பினை யாதெனில், ‘அங்கிருந்து மட்டுமன்று இங்கு வந்தும் தகவல் சேகரிப்பதற்கு நான் தயார்’ என்பதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

3 comments :

Anonymous ,  August 26, 2013 at 4:22 PM  

ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியே ஐக்கியநாடுகள் சபை.இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே நவநீதம்பிள்ளையையும் புரிந்து கொள்ள முடியும்.

இந்த பெண் அதிகாரி தன் சொந்த விருப்பு-வெறுப்பு பெயரில் எதுவும் கடமை ஆற்ற முடியாத ஒரு ஊதுகுழல்.

ஈய ஈழ தேசியம் ,  August 27, 2013 at 11:13 AM  

// இந்த பெண் அதிகாரி தன் சொந்த விருப்பு-வெறுப்பு பெயரில் எதுவும் கடமை ஆற்ற முடியாத ஒரு ஊதுகுழல்//
உண்மை. ஆனால் புலம்பெயர் புலிகளும் தமிழர் கூட்டமைப்பும் நவநீதம்பிள்ளையை வாளுடன் வரும் வீர பெண்ணாக படம் காட்டுகிறார்கள்

Anonymous ,  August 28, 2013 at 10:46 AM  

Political opportunists makes her arrival to promote their political business.She is from a dummy organization,controlled by the powerful countries.There are VIP's to represent the Government.Hon President's presence may be not vital.Duty of the opposaition is not to always oppose the government

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com