Saturday, August 17, 2013

புதிய ஆயுத போராட்டம் ஒன்றை அரங்கேற்றத் துணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ரதன்.

இவ் ஆக்கம் முதன் முறையாக இலங்கை நெற் தளத்திற்காக சாணக்கியன் ஆகிய என்னால் எழுதப்படுகின்றது. இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அன்றி எந்த அரசியற் கட்சிகளையும் ஊக்குவிப்பதற்காக அல்ல. நாட்டில் நடக்கும் போலித்தனமான மனிதர்களை மக்களுக்கு இனங்காட்டுவதற்காகவும், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவதற்காகவும் மூன்று மாத தேடல்களின் பின் இச் செய்தி பிரசுரமாகின்றது.

வட மாகாண தேர்தல் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டு செல்கின்றது. பல முன்னணிக் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வவுனியாவில் களமிறங்கியுள்ள இந் நிலையில் பல உண்மைத் தகவல்கள் எம்மால் திரட்டப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கிடையிலான இறுதி யுத்தத்தின் பின் இன்று மக்கள் தம் சொந்த வீடுகளில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் தேசிய உணர்வைத் தூண்டி மீண்டுமொரு போராட்ட நிலையை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ரதன் செயற்பட்டு வருகின்றார். இவ்வாறு தேசிய உணர்வை கிளப்பிவிட்டு வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் வீர வசனங்களை பேச பொலிஸ் என்ன செய்து கொண்டிருக்கின்றது? தூங்குகின்றதா? இவ்வாறு நாம் ஆராயும் போது திடுக்கிடும் தகவல்கள் பல எமக்கு கிடைத்துள்ளன.

ரதனின் தம்பியான கஜன் என்பவர் இராணுவத்தினருடன் பெற்றுக்கொண்ட நட்பை பயன்படுத்தி வீர வசனங்களை ரதன் துணிந்து பேசி வருகின்றார். முன்பு அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முகமாக கருத்துக்களை வெளியிட்டதால் சுரேஸ் பிரேமசந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் ரதன் மட்டும் எவ்வித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை. காரணம் இந்த கஜனின் ஆதரவுதான்.

புலிகளின் இயக்கத்தில் இருந்து வாகன கடத்தல் செய்து வந்த கஜன் தனஸ்ரீ என்ற சி.ஐ.டி உடன் சேர்ந்து கப்பம் வாங்கியதாக சிலர் தெரிவிக்கின்றனர். பின்பு கஜன், செல்லா, ஞானம் ஆகியோர் ஒரு குழுவாக செயற்பட்டு பல சட்ட விரோத செயல்களை செய்து வந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இணைந்து வவுனியாவில் வீனஸ் கல்வி நிலைய நிர்வாகியான சந்திரன் என்பவரை கப்பம் கேட்டு முழுப்பணமும் கிடைக்காததால் சுட்டுக் கொன்றுள்ளனர். அத்துடன் செந்தில்காந்தன் என்பவரை அவரது கடைக்குள்ளேயே சுட்டுக் கொன்றுள்ளனர். மற்றும் ரெலோ உறுப்பினரான ரமேஸ் என்பவரை தனிப்பட்ட விரோதம் காரணமாக அவரது வீட்டின் முன்னாலேயே கொன்றுள்ளனர். அடுத்து ரட்ணம் ட்ரவல்ஸ் உரிமையாளர் குணரட்ணம் என்பவரையும் இவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இவ்வாறு உயிர்களை சுடுவது இவர்களுக்கு சாதாரணமானது என்று பாதிக்கப்பட்ட சிலர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இந்த வாக்கு மூலங்களை பாதிக்கப்பட்டோர் பொலிஸில் சொல்லவும் பயப்படுகின்றனர்.

இவ்வாறு பல குற்றச் செயல்களை துணிந்து அரங்கேற்றிய கஜன் தாய்லாந்து சென்று அங்கு பெரிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பல தமிழ் இளைஞர்களிடம் பணம் பெற்று அங்கிருந்து திரும்பி இங்கு வந்துள்ளார். இவ்வளவு குற்றச் செயல்கள் மட்டுமல்ல இன்னும் பல ஆதாரங்கள் எம் கையில் உள்ளன. இவருடைய ஆதரவில் தான் ரதன் வடமாகாணசபை தேர்தல் களத்தில் தீவிர உணர்வைத் தூண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த ரதனுக்கு எதிராகவும், கஜனுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணம் என்ன?

இந்த ரதன் மக்களிடையே வாக்குகளை பெறுவதற்காக சில போராட்டச் செய்திகளை பேசி வருகின்றார்.

1. முள்ளிவாய்க்கால் பற்றிய பேச்சு
2. போராட்ட உணர்வை தூண்டும் வகையில் அமைந்த பேச்சு
3. அரசுக்கு அபகீர்த்தியை உருவாக்கும் பேச்சு.
4. துயிலுமில்லங்கள் இடித்தது சம்பந்தமான பேச்சு.
5. மாவீரர்களை போற்றும் வகையிலும் அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர இணையவேண்டும் என்னும் பொருள்பட அமைந்த பேச்சு

என்று தமிழ் மக்களின் உள்ளங்களில் விஷத்தை மெல்ல மெல்ல ஏற்றி வருகின்றார். இதில் இன்னொரு கொடுமையான விடயமும் அடங்கியிருக்கின்றது. யாதெனில் இந்த பிரச்சார நடவடிக்கைகளுக்காக தரம் 10, 11 (15, 16 வயது) மற்றும் உயர்தர மாணவர்களை (17 வயது) உபயோகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாணவர்களின் மனதிலும் ஒரு போராட்ட எண்ணம் உருவாக வாய்ப்பு இருக்கின்றது என்பதை அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையாளர் இதற்கு உடனடி நடவடிக்கைகள் எக்கத்தவறும் பட்சத்தில் பல விபரீதங்கள் நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஏனெனில் ரதன் இந்தப் பிரச்சார நிகழ்வுகளின் பின் பல திட்டங்களை காலப்போக்கில் செய்ய இருப்பதாக அவரது கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மிரட்டல்களினூடாகவும் அனுதாபத்தினூடாகவும் மருந்துப் போத்தலுடன் வேட்பாளராகிய ரதன் அதே அனுதாபத்தின் மூலம் வாக்குகளை பெறவும் திட்டம் தீட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளது. வாக்குகளை பெறுவதற்காக தன் போஸ்ரல்களை மதில்களில் ஒட்டி பின் தன் நம்பிக்கைக்கு உரிய சில மாணவர்கள் மூலம் தன் போஸ்ரல்களுக்கு ஒயில் அடித்து விளம்பரப்படுத்தி அனுதாப ஓட்டுக்களை பெற முயன்றுள்ளார். இதில் தன் மேல் யாரும் சந்தேகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரவி மற்றும் மயூரன் இணைந்து நிற்கும் போஸ்ரல்களில் மயூரனின் போஸ்ரல்களுக்கு ஒயில் அடித்து ரெலோவுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டம் தீட்டியுள்ளார். இது வவுனியாவில் வைரவபுளியங்குளம் பகுதியில் மிகையாக நடந்துள்ளது.

14.08.2013 அன்று வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திரு.எஸ்.கருணாநிதி தேர்தல் பரப்புரை பற்றி தெளிவாக எடுத்துரைத்தும் அதனை கருத்திற் கொள்ளாது ரதன் செயற்பட்டு வருகின்றார். இவ்வாறு செயற்படுவதன் மூலம் பொலிஸ் கைது செய்தால் அதனை தன் தேர்தல் பிரச்சார உத்தியாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளார். இதற்கு உதாரணமாக கணகராயன்குளம் சென்ற ரதன் அங்கு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தன் போஸ்ரல்களை ஒட்டியுள்ளார். இது இவரது வீம்புச் செயலை நன்கு பறைசாற்றகின்றது. இதன் உண்மைத்தன்மையை அறியாது சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதன் மூலம் அனுதாப ஓட்டுக்களை குவிக்க திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார்.

இனி வரும் காலங்களில் தன் வீட்டுக் கண்ணாடிகளை கல்லெறிந்து உடைத்தும், வாகனங்களை சேதப்படுத்துவதன் மூலமும் ஓட்டுக்களை பெற திட்டம் வகுத்தமை அவரது மாணவர்களாலேயே எமக்கு செய்தி தரப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு தனக்கு அடிக்குமாறு தன் நம்பிக்கைக்கு உரிய மூன்று மாணவர்களிடம் தெரிவித்திருக்கின்றார். அவ் வேளையில் வைத்தியசாiயில் இருந்து கொண்டு ஊடகங்கள் மூலம் வாக்குகளை பெறவும் பெரிய பெரிய திட்டங்களை வகுத்து செயற்படும் ரதன் மாகாண சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் எப்படியான கீழ்த்தரமான வேலைகளையும் செய்வார் என்று உறுதிபடக் கூறலாம்.

இவர் நகரசபை உறுப்பினராக இருந்து பல ஊழல்களில் சிக்கியுள்ளமை அனைவரும் அறிந்த ஒன்று. அந்த ஆதாரங்களுடன் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன்.

இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளை துணிந்து செய்யும் ரதனுக்னு மக்கள் வழங்கப்போகும் பதில் என்ன?

---சாணக்கியன்---

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com