எம்மை வைத்த அரசியல் நடத்த வேண்டாம்; எழிலனின் மனைவிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!
வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உறுப்பினர்களின் ஒன்றியத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று(21.08.2013 புதன்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தில் முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போராளிகளின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்திக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு சந்தோசமாக நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் நாங்கள் அச்சுறுத்தப்படுகின்றோம் விசாரணைக்குட்படுத்தப்படுகிறோம் என்று சொல்லி அரசியல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இவ்வாறான அரசியல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது என்று கூட்டமைப்புக்கு எதிராக ' எமக்கு உதவுவதாக கூறி வெளிநாடுகளில் வாங்கும் பல மில்லியன் ரூபா பணம் எங்கே கூட்டமைப்பே கூறு' ' ஆனந்தி நீ எங்களுக்காக செய்தது ஏதாவது உண்டா' ' குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முன்னாள் போராளிகளை காட்டிக்கொடுக்காதே' என பல்வேறு கோசங்களைக் தாங்கியவாறு 200 க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.
2 comments :
COODDU AMAIPPOO the best political dramatizens,
Their political stage needs new attractive faces or faces with atleast some backgrounds in order to win the race that's all.Pragmatically nothing will happen That's what happening.
இவள் புருஷன் தான் மாவிலாறு தண்ணியை பூட்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு உலை வைத்தவன். இவளுக்கு வோட் போடுபவன் எல்லாம் தமிழின துரோகிகள் , ஆனால் இலங்கை அரசு இவள் போன்றவர்களை உயிருடன் விட்டு இன்று மகிந்த டென் ஹாக்க் போக தயாராக வேண்டியது தான் , புலியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும், 1987 – 1990 ஆண்டுகளில் புலியை ஓட ஓட அடித்து பிரேமதாசாவின் கால்களில் விழ வைத்தவர்கள் யாரும் இப்ப ஆலோசனை சொல்ல இல்லையா ? எல்லோரும் சுரேஷ் , சுகு , சங்கரி போல் TNA யுடன் சேர்ந்து விட்டார்களா ?
மற்றவர்கள் எல்லாம் சயநிட் அருந்த வேண்டும் , நீங்கள் மட்டும் ஆர்மியிடம் சரணடைவீர்கள் , அவர்கள் உங்களுக்கு கொத்து ரொட்டியும் பிரியாணியும் தருவார்கள் , என்ன ஒரு எதிர்பார்ப்பு , எப்படிப்பட்ட சுயநலவாதிகள், இவர்கள் தமிழ் ஈழம் பெற்று தருவார்கள் என 30 வருடமாக ஒரு முட்டாள் கூட்டம் இவர்கள் செய்த அட்டூழியங்களை ஆதரித்து வந்துள்ளது , இன்று கூட அப்படியான கூட்டங்கள் உள்ளது.
யாரும் பொது மக்கள் இராணுவத்துடன் பேசினால் அவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் , ஆனால் புலித்தலைவன் மகன் இராணுவத்திடம் பொய் நக்குவானம் , என்ன கேவலம் கேட்ட கொலைக்கூட்டம் , வெக்கம் மானம் துளியும் இல்லை, வீரம் பற்றி இனியும் இவர்கள் பேசக் கூடாது
Post a Comment