நாட்டில் எந்தவொரு மாகாணமும் தாயகம் என்ற கோட் பாட்டின் கீழ் எல்லை நிர்ணயத்திற்கு உட்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. காலனித்துவ காலத்திலி ருந்தே இந்நிலை காணப்படுவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வாய்மூல வினாவொன்றுக்கு நேற்றைய தினம் பாராளு மன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் 1833 ம் ஆண்டு உருவாக்கப்பட்டவை. வடமேல் மாகாணம் 1845 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வடமத்திய மாகாணம், 1873 ம் ஆண்டிலும், ஊவா, மாகாணம் 1886 இலும், சப்ரகமுவ மாகாணம் 1889 இலும் உருவாக்கப்பட்டன. எனினும் அவை தாயகம் என்ற கோட்பாட்டின் கீழ் உருவாக்கப்படவில்லையென அமைச்சர் தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
1998 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் அமைந்தது. எனினும் 2006 ம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment