கைத்தொழில் பேட்டைகளில் மாத்திரமே தொழிற்சாலைகள். ஜனாதிபதி
ரதுபஸ்வல பிரதேசத்தில் எழுந்த குடிநீர் பிரச்சினை மூன்று உயிர்களை எடுத்து நிற்கின்றது. குறித்த பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பிரதேச மக்களின் குடிநீரை மாசுபடுத்துகின்றது என்றே மக்கள் தெருவுக்கு இறங்கியிருந்தனர். மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த குவிந்த படையினர் மேற்கொண்டு துப்பாக்கி பிரயோகத்தில் முவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஎதிர்காலத்தில் கைத்தொழில் பேட்டைகளில் மாத்திரமே தொழிற்சாலைகளை நிர்மாணிக்கமுடியும் என்றும் பொது மக்களும் தொழிற்சாலை உரிமையாளர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து கொள்கை அளவிலான தீர்மானத்திற்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரதுபஸ்வல பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ரதுபஸ்வல விசாரணைகள் முறையாக இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment