கொரியாவில் தொழில்வாய்ப்புக்களுக்காக நேற்று தொடக்கம் தொடர்ந்து 4 நாட்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை கொரியாவில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்த்து கடவு சீட்டினை தயாரித்து கொள்வதற்கு நேற்று பெரும் எண்ணிக்கையானோர் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தனர் என்றும் நிலைமையினை கருத்திற்கொண்டு துரித கதியில் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment