Sunday, August 18, 2013

வாசுதேவா வில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான புளொட் உறுப்பினர்களை கொன்றொழித்த புலிகளை விடுவிக்க கோருவாராம் சித்தார்த்தன்.

தமிழீழ விடுதலை போராட்டம் ஆரம்பித்து , அந்த போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்திருந்த ஆயிரக்கணக்கான உன்னதமான போராளிகளை புலிப்பாசிசம் அதிகார வெறிகொண்டு கொன்றொழித்திருந்தது. அந்த வரிசையில் புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தர்களான வாசுதேவாவில் ஆரம்பித்து மாணிக்கதாசனில் தொட்டு சமாதான காலத்தில் மோகன் வரை ஆயிரக்கணக்கான புளொட் உறுப்பினர்களை புலிகள் கொன்றொழித்திருந்தனர் என்பது யாவரும் அறிந்தது.

புலிகள் புளொட் உறுப்பினர்களை மாத்திரம் கொன்றொழிக்கவில்லை அவர்களது பச்சை குழந்தைகளைக்கூட கொன்றொழித்ததுடன் புளொட் இயக்க உறுப்பினர்களை காதலித்த குற்றத்திற்காக யுவதிகள் குதறப்பட்டு பின்னர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவங்கள் கூட வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.

புலிகள் இயக்கத்தின் மேற்படி அராஜகங்கள் கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவ்வியக்கத்தைச் சேர்ந்த 12000 மேற்பட்ட பயங்கரவாதிகளை சிறைப்பிடித்த அரசாங்கம் அவர்களை கட்டம் கட்டமாக புனருத்தாபனம் அளித்து விடுதலை செய்ததுடன் , பாரிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள் சிலரை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளதுடன் பாரிய குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மேற்படி பாரிய குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே புலிப்பாசிசத்தின் கொலைவெறிக்கு தமது உறவுகளை பறிகொடுத்த தமிழ் மக்களின் வேண்டுதலாகவும் உள்ளது.

இந்நிலையில் புலிகளின் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்த்துள்ள புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் , எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ள நவநீதம்பிள்ளையை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மேற்படி புலிப்பயங்கரவாதிகளை இலங்கை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் எனக் கோருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினக்குரல் பத்திரிகைக்கு அவர் வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் நவநீதம்பிள்ளையை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் எவ்வாறான விடயங்களை பேச உத்தேசித்துள்ளீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு சித்தார்த்தன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

முக்கியமாக நாம் அடிக்கடி பேசிவரும் விடயங்களான இளைஞர்களின் விடுதலை பற்றி பேசவிருக்கிறோம். முதலாவதாக தடுப்புக்காவல்களில் நீண்டகாலமாக விசாரணைகளின்றி இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, இன்றும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வடகிழக்கில் உளவியல் ரீதியாக அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் சம்பவங்கள் பல இடம்பெறுகின்றன அவை பற்றியும் மேலும், காணிபறிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற பல விடயங்கள் குறித்தும் பேசவிருக்கிறோம். இவை பலமுறை கூறப்பட்ட விடயங்களாக இருப்பினும், திரும்பத் திரும்ப இவற்றைக் கூறினால் தான் அவர்கள் இவ்விடயங்களை தமது கவனத்தில் சரியாக எடுத்து அதற்கு ஒரு சரியான தீர்வை எமக்குப் பெற்றுத் தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

3 comments:

  1. நாய்க்கு வாழ்க்கைப்பட்டால் குலைத்துத்தான் ஆகவேண்டும்.

    கண்டு கொள்ளாதேங்கோ..

    ReplyDelete
  2. புண்ணாக்கு மண்டையன்August 18, 2013 at 7:20 PM

    "புலிகளின் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்த்துள்ள புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்" என்பது தவறான பிரயோகம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றச் சென்றுள்ள புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் என்று சொல்ல வேண்டும்.

    காரணம் புலன்பெயர்ந்த புளொட்டுக்களிடம் என்ன இப்படி போட்டயள் என்று கேட்டால் கொஞ்ஞம் பொறுங்கோவன் நாங்கள் சும்மா போக இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றி எங்கட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர்ரத்துக்குத்தான் இந்தப்போடு என்கினம்..

    ReplyDelete
  3. பதவி ஆசை யாரையும் விடுவதாக இல்லை, இந்த வரிசையில் வந்த சித்தனுக்கு, எவனின் காலை பிடித்தாகிலும் பாராளுமன்ற ஆசனத்தைப் பிடித்து விடவேண்டுமென கங்கணங்கட்டினார், டக்ளஸ் இருக்கும் வரை அது கை கூடாது என்பதால் துரோகிகளென வசை பாடிய புலிகளை இன்று மீட்பர் என கூறி மாகாணசபை ஆசனத்தை கைப்பற்றி விட வேண்டுமென்பதே சித்தரின் கனவு.

    ReplyDelete