வாத்துக்களை விரட்டும் ஆளில்லா விமானம்!
டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருவதுடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகளை அழிக்க அவற்றின் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால் கனடா நாடும் ஆளில்லா விமானம் (டிரோன்) தயாரித்துள்ளதுடன் அவற்றை கனடா பயன்படுத்துவது வேடிக்கையான விஷயமாக உள்ளது.
அதாவது கனடா தலைநகர் ஒட்டாவாவில் ‘ஜீஸ்’ எனப்படும் வாத்து போன்ற பெரிய வடிவிலான பறவைகள் அதிகம் உள்ளதுடன் அவை ஒட்டாவாவில் உள்ள ஆற்றில் இறங்கி கூட்டம் கூட்டமாக நீந்துவதுடன் ஆற்றின் நீரை அவை மிகவும் அசுத்தம் செய்து வருவதுடன் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு செய்கின்றன.
எனவே, ஆளில்லாமல் பறக்கும் 26 இஞ்சி அகலமுள்ள ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தி தண்ணீரின் மேலே தாழ்வாக பறந்து அவற்றை வெளியே விரட்டியடிக்கின்றன.
0 comments :
Post a Comment