வடமாகாண சபை தேர்தலில் முடியாது என்றால் முடியாது தான்!
இதுகாலவரையான தேர்தல்களை விட்டுவிடுவோம். இந்தத் தேர்தலிலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இங்கே எது வும் நடக்காது எதுவும் செய்ய முடியாது என்பதைக் காட்டுவதற்காகவே போட்டியிடுவதாகச் சொல்கிறது. இந்தத் தேர்தலிலும் இங்கே எதுவும் நடைபெறாது என்பதை சர்வதேசத்திற்கு காட்டும் காரணத்திற்காகத்தான் வாக்களிக்க வேண்டுமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
நமது மக்களின் துன்பங்கள் தொடர்வதற்கும், பிரச்சினை தீராமலிருப்பதற்கும் நம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு காரணங்கள் இருக்கக் கூடும். சிலர் இப்போதிருக்கும் அரசாங்கம்தான் காரணம் என்று சொல்லக் கூடும். இன்னும் சிலர் இந்த நாட்டில் இதுவரை இருந்த, இனி வரப்போகும் எல்லா அரசாங் கங்களுமே காரணமென்னக் கூடும்.
வேறு சிலர் இந்தியாவையும் அதேபோல் அமெரிக்காவை, சீனாவை, ரஷ்யாவை, முழு சர்வதேசத்தையும் விரல் நீட்டக் கூடும். மேலும் பலர் இந்த எல்லாமே காரணங்கள்தான் என்று விளக்கம் வைத்திருக்கக் கூடும். யார் கண்டது, சோதிடத்தை, கிரக பலன்களைக் காரணமாய்ச் சொல்லக் கூடியவர்களும் இருக்கக் கூடும்.
நம்மிடமிருந்த - இருக்கும் பிழைகளும்தான் காரணம் என்று இன்று சிலருக்கேனும் தோன்றலாம். இவர்களோடுதான் இந்த விஷயம் குறித்து நாம் விவாதிக்க முடியும். தமிழ் மக்களின் தலைவர்களாகச் சொல்லிக் கொள்பவர்கள், மற்ற எல்லோரி னதும் பிழைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தாங்கள் செய்யவேண்டிய முயற்சி பற்றிச் சொல்கிறார்களு மில்லை| செய்கிறார்களுமில்லை.
உதாரணத்துக்கு, இலங்கை அரசாங்கமோ, இந்தியாவோ, சர்வதேசமோ என்ன தீர்வைச் சொல்கின்றன என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, இவர்கள் தாங்கள் கேட்கும் தீர்வு என்ன என்பதைச் சொல்வதில்லை. இவர்கள் ஒரு தீர்வுத் திட் டத்தை வைத்து, அதற்கு இந்தியாவின், சர்வதேசத்தின் ஆதரவை திரட்டி முயற்சிப்பதை விட்டுவிட்டு, இந்த நாட்டில் தீர்வொன்று சாத்தியமேயில்லை என்ற அவநம்பிக்கையையே வெளியிட் டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதுவும் சரிவரப் போவதில்லை என்பதைச் சொல்ல எமக்குத் தலைவர்கள் எதற்கு? இவர்கள் தங்களால் முடியும் என்று நம்பி எதையும் செய்வதில்லை எதுவும் முடிந்துவிடக் கூடாதே என்று நினைத்துக்கொண்டே செயற்பட்டால் எதுதான் சாத்தி யப்படும்? முடியும் என்று நம்பிக்கை கொள்ளாமல் எதையும் சாதிக்க முடியாது.
முடியும் என்று மனதை வைத்தால்தான் முடியும் என்பதற்கு இந்த உதாரணம் சொல்லப்படுவதுண்டு. 30 அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட ஒரு பலகையை நிலத்தில் போட்டு விட்டு நடக்கச் சொன்னால், பலகையின் ஒருபுறத்திலிருந்து மறு புறத்திற்கு அடிசறுக்காமல் எவராலும் நடந்துசெல்ல முடியும். ஆனால் இதே பலகையை உயர்ந்த இரு கோபுரங்களிடையே ஆகாயத்தில் வைத்துவிட்டு அவ்வளவு உயரத்தில் நடக்கச் சொன்னால், இரண்டடி நடக்கு முன்னரே கைகால்கள் நடுங்கத் தொடங்கும். சில அடிதூரம் நடப்பதற்குள் கால்கள் பின்னி விழுந்துவிட நேரும்.
காரணம் இதுதான்: பலகை நிலத்தில் கிடக்கும்போது நடப்பது இலகுவென்று மனம் நினைக்கிறது. ஆனால் உயர்த்தப் பட்டதும், நாம் விழுந்துவிடுவோம் என்று மனம் நினைக்கிறது. உடனே பயத்தால் நடுங்குகிறோம். நாம் விழப்போகிறோம் என்ற எண்ணம் தோன்றியதும் அதற்கு முன்னால் நமது முயற்சிகள் வீணாகிவிடுகின்றன| தோல்வி பெறுகின்றன. ஆமாம், முடியாது என்று எண்ணுபவர்களால் ஒருபோதுமே முடியாதுதான்.
0 comments :
Post a Comment