காணாமல் போனோர் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது!
யுத்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோர் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழு, ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்டுள்ளது. மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் திமிங்கு பட்டாதுருகே, பிரியந்தி சுரஞ்சனா வைத்தி யரட்ன, மனோ இராமநாதன் ஆகியோர் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
ஆணைக்குழுவிற்கு விசாரணைகளை மேற்கொண்டு, ஆராய்வதற்கு முழு அளவிலான அதிகாரமளிக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான அறிக்கை 6 மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆட்கடத்தப்படல் அல்லது காணாமல் போன சம்பவங்கள் கண்டறியப்படுமிடத்து, அதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணுவது அவசியமென்றம், அந் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது, அவசியமென்றும், வலியுறு த்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு என்பனவற்றிற்காக எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு, இதுபோன்ற விசார ணைகள் மேற்கொள்ளப்படுவதாக, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆணைக்குழு அதன் பணிகளை மேற்கொள்வதற்கு, உதவியும், ஒத்துழைப்பும் வழங்கும்படி, ஜனாதிபதி, அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கும், பணிப்புரை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment