வவுனியா லோகாஜினி புதிய சாதனை!
வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான கமலநாதன் லேகாஜினி, இந்த வருடம் நடைபெற்ற 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள், வவுனியா மாவட்ட தேசிய விளையாட்டு விழா, வடமாகாண தேசிய விளையாட்டு விழா என்பவற்றில் கலந்து கொண்டு 200 மீற்றர், 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், வட மாகாண மட்டத்தில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையையும் அண்மையில் படைத்துள்ளார்.
வவுனியா விபுலானந்த கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரான ரி. பத்மசொரூபன் அவர்களே லேகாஜினியின் பிரத்தியேக பயிற்சியாளராக லேகாஜினியின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அன்வர்)
0 comments :
Post a Comment