Saturday, August 10, 2013

உங்கள் உடலை வலுவாக்கும் மாதுளம் பூ

எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம் அப்படியிருக்கும் போது நாம் மாதுளை என்றால் பலருக்கு ஞாபகத்துக்கு வருவது நாம் உண்னும் மாதுளம் பழம் தான்.

மாதுளம் பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளம் பூவும் சத்துகளை கொண்டுள்ளதுடன் இது இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மிகச் சிறந்த மருந்து பொருள்.

உலர்ந்த மாதுளம்பூவுடன் வெல்லம், மூன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும் சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்று மணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும்.

உலர்ந்த மாதுளம் மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டால் கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டி அளவு சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்தினால் உடனே குணம் அடையும்.

உலர்ந்த மாதுளம் பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே முறையில் கொடுக்க குணம் தெரியும். சீரகத்தோடு உலர்ந்த மாதுளம் பூவைச் சேர்த்து மண் சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.

ஆரோக்கியமான உடல் நலம் பெற விரும்புபவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து ஆரோக்கிய உடல் கிடைக்கும்.

சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டதும் வயிறு நிறைந்தது போல் காணப்படுவதுடன் பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது எனவே இவ்வாறான பிரச்சினை உடையவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வாயுக்கள் சீற்றம் குறையும்.

கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும் அது மட்டுமல்லாது மாதவிலக்கு நிற்கும் காலமான மொனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகுவதுடன் கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும் இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்குவதுடன் வெள்ளை படுதலும் குணமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com