Sunday, August 4, 2013

தமிழ் நிர்வாக அதிகாரிகளின் பதவிப் போட்டியால் மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக சிங்களவர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி சாள்ஸ் உள்ளார். பன்னெடுங்காலமாக வவுனியா மாவட்டத்தில் நிர்வாக சேவையில் இருந்த அவர் வன்னியிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டு அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டபோது மிகவும் அயராது சேவையாற்றியவர் என்பது யாவரும் அறிந்தது.

இவர் தற்போது மட்டு அரச அதிபராக கடமையாற்றி வருகின்றார். இவரது கதிரையை கைப்பற்ற கருணாவின் கையாளான மாவட்ட மேலதிக அரச அதிபர் பாஸ்கரன் முயன்று வருகின்றமை வெளிப்படையான உண்மை. இந்த பதவிப்போட்டி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை பிளவு படுத்தியுள்ளது. பிரதேசவாதிகள் சிலர் பாஸ்கரனின் பின்னால் ஒன்று திரண்டு அரச அதிபரின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையிடுகின்றனர் என்ற தகவல்களும் மறைப்பதற்கு உகந்ததன்று.

இந்த பிரதேசவாதத்தின் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு பெரும்புள்ளிகள் எனப்படுகின்ற பொன் செல்வராசா , அரியநேந்திரன், யோகேஸ்வரன், ஜனா ஆகியோர் மாத்திரம் அல்ல கருணாவும் உள்ளார்.

இந்நிலையில் அரச அதிபர் விடுமுறையில் சென்றுள்ளார். அந்த இடத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டு மாவட்ட செயலகம் பிளவு பட்டு நிற்கும் நிலையில் மேலதிக அரசாங்க அதிபரிடம் கடமையை பொறுப்பளித்தால் சிக்கல்கள் மேலும் விரிவடையலாம் என்ற எதிர்பார்ப்பில் பொது நிர்வாக சேவைகள் அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவினை மாவட்ட செயலக அதிகாரிகள் , ஊழியர்கள் மற்றும் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

தமிழ் நிர்வாக சேவை அதிகாரிகள் மக்களுக்கு தமது கடமைகளை சரிவரச் செய்யாத இடத்தில் அந்த இடத்திற்கு சிறந்த சேவையை செய்யக்கூடிய அதிகாரிகளை இன மத பேதங்களுக்கு அப்பால் நியமிப்பது வரவேற்ப்புக்குரியதே.

1 comment:

  1. This is really hard for tamils to get rid of this unusual social trend.They are always jealous of others success.that´s our born character.`We learn a lot about religions,we go to the temples and to churches.We do say prayers.we sing Devarams at the temples.but the satan remains in our hearts.He
    plays a dominant role in our lives

    ReplyDelete