பூசகரொருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த த.ம. விடுதலைப் புலிகள் உறுப்பினர் கைது!
சந்திவெளி பிரதேசத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இடம் பெற்ற பூசகரொருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பின ரொருவரே ஏறாவூர் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையிலேயே மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment