கிரேண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில். வதந்திகளை நம்பாதீர்! பொலிஸார்
சமாதானத்தை பாதுகாப்பதற்காக இன்று மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புனிதஸ்தலம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இரு தரப்பினருக்கிடையே நேற்று இரவு கிரேண்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. நிலமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் விசேட அதிரடி படையினரும் ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டனர்.
நிலமையை வழமைக்கு கொண்டுவர நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 7 மணி வரை கிரேன்ட்பாஸ் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதியிலோ, இன்றைய தினமோ எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏற்பட்ட சிறு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சில சூழ்ச்சிதாரிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தமையினால் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 7 மணி வரை கிரேண்ட்பாஸ் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அமைதியாக இருக்குமாறும் பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.
இதேநேரம் புனிதஸ்லம் ஒன்றை அடிப்பயைடாக கொண்டு ஏற்பட்ட சம்பவத்தை இரு தரப்பினர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் மூலம் இணக்கப்பாட்டுடன் தீர்த்துக்கொள்ளப்பட்டதாக அப்பகுதிக்கு சென்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment