Wednesday, August 7, 2013

இனவாதத்தை தூண்டும் த.தே.கூ வெற்றிபெற்றால் வடக்கில் அபிவிருத்தி திட்டங்களுக்கு தடை ஏற்படும்.

மாகாண சபை தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துள்ள பிரச்சார நடவடிக்கைகள் ஏனைய இன மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதம் தூண்டப்படுவதற்கு காரணமாக உள்ளது என அமைச்சர் திஸ்ஸ விதாரன தெரிவித் துள்ளார்.

மாகாண சபை தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துள்ள பிரச்சார நடவடிக்கைகள் காரணமாக இனவாதம் அதிகளவில் தூண்டப்படுமென அச்சமடைவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

17 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிப் பொறுப்பு தமி;ழ் தேசிய கூட்டமைப்பிடம் காணப்படுகிறது. குறித்த உள்ளுராட்சி மன்றங்களுக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் மீளவும் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தடை ஏற்படும். மாகாண சபைக்காக ஒதுக்கப்படும் நிதியை கூட்டமைப்பு பயன்படுத்தாது, மத்திய அரசிற்கு திருப்பியனுப்பும் சூழல் உருவாகும்.

இதனால் வடபகுதி மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து வரலாற்று தவறை செய்ய கூடாது என அமைச்சர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டுள்ளார்.

அரச சார்பானவர்களை தெரிவு செய்வதன் மூலம் வடபகுதியின் அபிவிருத்தியை மேலும் பன்மடங்காக அதிகரிக்க முடியுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனூடாக அதிகளவான வேலைவாய்ப்புகளும் உருவாகுமென அமைச்சர் திஸ்ஸ விதாரன மேலும் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  August 7, 2013 at 8:37 AM  

What Professor Mr.Tissavitharane`s
opinion is to be taken into serious consideration.Under fed/Party,Tamil Arasu Kadchchi and the present TNA,we haven`´t achieved anything .There was no social or economical developments.The roads,streets,even the lanes were left as it were.Their propaganda machine did the "racial hatred" systematically.They made it as an epidemic among the nations.But those who led the tamil society and their kith and kins were well
off even now they are well off in foreign countries.First of all we need social and economical developments in the peninsula and not the racial hatred.It is better to live together with peace and harmony.A good decision is in our hands,for that we are compelled to get out of gripping of the TNA`s trance wheel.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com