Sunday, August 11, 2013

புதிய சட்டத்தால் முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை!

முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டங்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் முச்சக்கர வண்டிகளை மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மாத்திரமே செலுத்த முடியும் என புதிய சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர முச்சக்கர வண்டிகளை செலுத்தும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு விதிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைய வலது புறமாக முச்சக்கரவண்டிக்குள் பிரவேசிக்கவோ அதிலிருந்து இறங்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியில் பயணிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை முச்சக்கர வண்டியில் பின்புறம் இடது பக்கத்தில் மிகவும் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயதிற்கு குறைவான இரண்டு சிறுவர்களை ஒரு பயணி என்ற அடிப்படையில் பயணிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும் முச்சக்கரவண்டிக்குள் நேர் எதிரே ஆசனங்களை பொருத்து வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சாரதியை தவிர்ந்த வேறு நபர்கள் சாரதிக்கான ஆசனத்தில் அமர்ந்து செல்வதற்கும் முச்சக்கர வண்டிக்குள் இருந்தவாறு கையேடுகளை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கி கருவிகள் அல்லது வேறு உபகரணங்களை முச்சக்கரவண்டியில் பயன்படுத்தக் கூடாது என விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது அனைத்து பயணிகளும் சாரதிவினவும் பட்சத்தில் செல்வதற்கு உத்தேசித்துள்ள பயணம் தொடர்பில் தகவல்களை வழங்கவேண்டு மெனவும் மானியில் குறிப்பிடப்படுகின்ற மொத்தக்கட்டணத்தையும் செலலுத்த வேண்டு மெனவும் புதியசட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகளுக்காக முச்சக்கர வண்டியை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் மானிகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  August 11, 2013 at 8:33 PM  

It is really a good taffic law.Reckless,crazy,inexperienced drunken money thirsty drivers are the curse and they are the cause for the accidents.Even the minibus, CTB
private vehicle drivers also to follow the strict speed limits.it is vital the traffic law has to add these guys also into the grip of the law.This is the best way to curtail the accidents.Radar cameras are very essential to bring them into knees

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com