உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளர்களான ஜோன் ஃபோடென் மற்றும் யான்னிக் ரீட் சேர்ந்து உருவாக்கியுள்ளதுடன் இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம் பூமியிலும் ஓடலாம். இதில் விசேடமாக எடுத்து நோக்கும் போது சாதாரண சைக்கிளுடன் இறகுகள் பொருத்தப்பட்டுள்ளது.
அதில் உள்ள காற்றாடிகள் சுழலும் போது சைக்கிள் உயர பறக்கிறது. காற்றாடிகளைச் சுழல வைக்க இயற்கை எரிசக்தியே பயன்படுத்தப் படுவதுடன் இச்சைக்கிளுக்கு லைசென்ஸ் தேவையில்லை, பெட்ரோல், டீசல் தேவையுமில்லை. தேவைப்படும் போது, இச்சைக்கிளை தரையில் சாதாரண சைக்கிள் போன்றும் ஓட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிக ரீதியான தயாரிப்புக்கு ஏற்ற பண உதவி கிடைத்தால் உடனே சந்தைக்கு வந்துவிடுமாம் என்கிறார்கள் இந்த பறக்கும் சைக்கிளின் வடிவமைப்பாளர்கள்.
No comments:
Post a Comment