Saturday, August 24, 2013

அம்பலம்! அம்பலம்!! சுரேஷ் பிரேமச்சந்திரனின் கோழிப்பண்ணை பிறாடு அம்பலம்!!!

அம்பலப்படுத்துகிறார் ஜேர்மனி இ. ஸ்ரீகுமரன்....!

யாழ்ப்பாணம் வேலணையில் வசிக்கும் திரு பாலசந்திரன் என்ற இடுப்புக்குகீழ் இயங்கமுடியாத உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை அமைத்துகொடுப்பதாக கூறி பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் வானொலி புலம்பெயர் மக்களிடம் சேகரித்த ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த விடயம் அண்மையில்
அம்பலமாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட வானொலி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர்கள் வழக்கம் போல் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறிய கருத்துக்களை உங்களுக்கு அறியதர வேண்டும் என்பதற்காக நான் இலங்கைக்கு நேரடியாக சென்று தகவல்களை சேகரித்துள்ளேன். இங்கு நான் கண்ட காட்சிகள் என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 2012/12/08 ஆம் திகதி ரி.ஆர்.ரி வானெலியின் நிகழ்ச்சியில் தெரிவித்த விடயம் யாதெனில்,




வேலனை பாலச்சந்திரன் என்ற உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை ஒன்றை அமைத்து கொடுத்துள்ளதாகவும் அக்காரியத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப் அணி) சுரேஸ் பிரேமச்சந்திரனின் மேற்பார்வையில் அவரது உதவியாளர் செய்து முடித்துவிட்டதாகவும் அதனால் பாலச்சந்திரன் என்ற உறவும், அவரது குடும்பத்தினரும் வாழ்க்கையை வளமாக கொண்டு செல்வதாகவும் கூறினார்கள். ஆனால் அங்கு நிலைமை தலை கீழாகவுள்ளது.

பாலச்சந்திரன் என்ற உறவை இது சம்பந்தமாக வேலனையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து விசாரித்தபோது அவர் எனக்கு மரியாதை கொடுத்து உபசரித்து விட்டு நான் தன்னை பார்க்க வந்தற்கான காரணத்தைக் கேட்டார்.

அதற்கு நான் ஜேர்மனியில் இருந்து வந்துள்ளேன் என்றும், இணையத்தளம் ஒன்றின் வாயிலாக பல உண்மைசம்பவங்களை உலகிற்கு தெரியவைப்பதற்காகவும் பல அப்பாவி மக்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஒரு குழுவினரது மோசடிகள் தெடர்பாக எழுதிவருகின்றேன் என்றும் கூறி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அதற்கு அவர் என்னிடம் ஏன் வந்தீர்கள் ஐயா? என்றார்.அதற்கு நான் கூறினேன்... இச் சம்பவங்களில் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள், அதனை உறுதிப்படுத்தித் தெரிந்துகொள்ளவே வந்துள்ளேன் என்றேன். அதற்கு அவர் ஒன்றும் புரியாதவராய் என்ன விடயம் என்று ஆவலாக விசாரித்தார். பின்னர் நான் நடந்தவற்றை விவரித்தேன்.

அவை வருமாறு:

பிரான்ஸ் நாட்டில் உள்ள ரிஆர்.ரி என்ற தமிழ் வானொலியானது புலம்பெயர் தமிழ்மக்களிடம் பாதிக்கப்பட்ட உங்களைப்போன்ற மக்களது துயரங்கள், இயலாமைகளைச் சொல்லி தமிழ்தேசியகூட்டமைப்பின் நற்பெயற்களைப் பயன்படுத்தி பல இலட்சம் ரூபாய்ப் பணத்தைச் சேகரித்து அவற்றினை உங்களுக்கு தருவதாகக் கூறி உங்களிடம் தொலைபேசி வழியாக பேட்டியெடுத்து அதனை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு போட்டுக்காட்டி அவர்களால் வழங்கப்படும் நிதியினை தாங்களும் தங்களுக்கு சம்பந்தப்பட்ட பா.உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதாக கணக்கு காட்டிவருகின்றனர். இதனை அறிந்த நான் அவர்களை தொடர்புகொண்டு கேட்டதற்கு....





'எல்லாம் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்தாச்சு.... உமக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என என்னை மிரட்டினார் சம்பந்தபட்டவர் (பா.உ) வேண்டுமென்றால் தான் கூட்டிக்கொண்டுபோய் காட்டுகிறேன் வாரும் என்றார் நானும் சம்மதித்தேன். ஆனால், அவர் என்னை வந்தால் வந்த வேலைபை பார்த்துவிட்டு ஊருக்கு போகின்ற வழியைப்பாரும் தேவையில்லாதவேலையில் மூக்கை நுழைக்காதீர் என பயமுறுத்தினார். இதனை சவாலாக ஏற்ற நான் உங்களிடம் வந்துள்ளேன் என்றேன்.



இது பாலசந்திரன் என்ற நபர் சம்பந்தப்பட்ட விடயம். அவரது வாழ்க்கைக்காக ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கோழிப்பண்ணை அமைத்துக்கொடுக்கப்பட்டதாகவும், அவருக்கு எழுபத்திரண்டாயிரம் ரூபா அவரது மருத்துவச் செலவுக்காக கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தான் விடயம் என்றேன்.

இதற்காத்தான் உங்களை தேடிவந்துள்ளேன் எனறு கூறியதை கேட்ட பாலசந்திரனுக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது தன்னைப்பயன்படுத்தி இவ்வளவு பணம் சூறையாடப்பட்டுள்ளதா என்று கேபமடைந்தார். அவ்வாறு நான் பயனடைந்தால் உங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு எனக்கு என்ன தயக்கம்.....






என்று கேட்ட பாலசந்திரன் வாருங்கள் தனது வீட்டை சுற்றிக் காட்டுகின்றேன் என்று தனது சக்கர நாற்காலியில் இருந்தவாறு சொன்னார். அதன்படி அவர் தனது சக்கர நாற்காலியை நகர்த்தியபடி என்னை தனது வீட்டின் வளவினை சுற்றிக் காட்டினார். அங்கு நான் கண்ட காட்சிகள் என்னை கண் கலங்கவைத்தது என்றால் அது என் தாய்மேல் ஆணை! அவரது வீட்டில் ரி.ஆர்.ரி வானொலியில் விளம்பரப்படுத்தியது போல் ஏதும் நடைபெறவில்லை!! கோழிப்பண்ணை அல்ல ஒரு கோழியைக்கூட என் கண்ணால் காணமுடியவில்லை என்பது தான் சத்திய விடயம்! தான் முதற்றடவையாக முப்பதினாயிரமும் அடுத்த தடவை பத்தாயிரமும் தான் இதுவரையில்பெற்றுக்கொண்டேன் என்றார்.



அவரது இயலாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கூட்டத்தினர் பற்றி நான் என்ன சொல்வேன்? இவர்களும் தமிழர்கள் தானா? தமிழ் மக்களுக்கு இவர்கள் என்ன செய்வார்கள் ? வாய் கிழிய கதைத்து பாராளுமன்றத்திலும் பொதுமேடைகளிலும் உரத்துகூறி எமது மக்களை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக வன்னியில் சைக்கிள் மற்றும் உழவு இயந்திரம் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகள் பற்றி அரசாங்கத்தை தட்டிக்கேட்ட நீங்கள் இன்று என்ன செய்துள்ளீர்கள்?



1.புலம்பெயர்தமிழ்மக்களால் நவம்பர் மாதம் 2012 அன்று வழங்கப்பட்ட ஒன்றரை இலட்சம் ரூபா போன இடம் எங்கே? சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களே!

2.தமிழ்.தே.கூட்டமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் உங்களது பதவியை இராஜினமா செய்வீர்களா?

3.ரி.ஆர்.ரி வானொலிக்கு அன்ரியம்மாவால் வழங்கப்பட்ட 32 ஆயிரம் ரூபா (200யூரோ) எங்கே?

இது சம்பந்தபட்ட தகவல்கள் எல்லாவற்றையும் சேகரித்த நான் பாலசந்திரனிடம் விடைபெற்றுக் கொண்டேன். அவரும் நன்றியுடன் என்னை வழியனுப்பிவைத்தார் தனக்கு உதவிகிடைக்காது விட்டாலும் மற்றவர்களுக்காவது கிடைக்கட்டுமே என்பதற்காகவும். துரோகிகளை உலகிற்கு காட்டுவதற்காகவும் தான் எப்போதும் துணைநிற்பதாக அவர் கூறினார்.

இது சம்மந்தப்பட்ட ரி.ஆர்.ரி வானொலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் விடுக்கும் பகிரங்க அறிவித்தல்!  நான் யாரையும் மறைமுகமாக குறிப்பிடவில்லை நேரடியாகவே குறிப்பிட்டுள்ளேன். உண்மை இல்லை என்றால் யாராவது என்மேல் வழக்கு தொடரலாம்....

சுவாரசியமான விடயம் என்னவெனில் ரி.ஆர்.ரி வானொலியில் அண்மையில் 'நான் ஒருவரை காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணிவரையில் கடத்திச்சென்று மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டை கொடுத்துவிட்டு வீட்டில்கொண்டுபோய் விட்டதாகவும் குறிப்பிட்டார்கள்.

பாலசந்திரனின் வீட்டுக்கு 4 தடவைகள் சென்று துன்புறுத்தியதாகவும் கூறினார்கள். ஆனால் பாலசந்திரனிடம் ரி.ஆர்.ரி வானொலியினர் நான் வந்து விசாரித்தால் திரவியநாதனையும் தெரியாது ரி.ஆர்.ரி வானொலியையும் தெரியாது என்று செல்லும்படி கூறியுள்ளனர்.



இதிலிருந்து வானொலியினரது அறிவுகூர்மை பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.... கடத்தப்பட்டவரை எவ்வாறு காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லமுடியும்? என்று மக்கள் கேட்கமாட்டார்கள் என்று நினைத்தார்களா? ஏன் இவர்கள் பாலசந்திரனிடம் திரவியநாதனையும் தெரியாது ரி.ஆர்.ரி வானொலியையும் தெரியாது என்று செல்லும்படி செல்லச்சென்னார்கள்.

அப்படியானால் தாங்கள் ஏதோ தப்புசெய்கிறார்கள் என்று தானே அர்த்தம்! வானொலியே தன்னை தெரியாது என்று யாரிடமாவது கூறலாமா வேடிக்கையாகவுள்ளது இக்கருத்து. வானொலியை நான் திருட்டுதனமாக ஒலிப்பதிவு செய்வதாகவும் கூறும் நிலையில் உள்ளது வானொலியின் கல்வியறிவு. வானொலிநிலையம் என்ன இரகசிய செய்தியா வாசிக்கின்றது? பெட்டிக்கடை திறப்பதுபோல் அல்லவா வானொலிநிலையம் ஆரம்பித்துள்ளனர்.... அடிப்படை அறிவுகூட இல்லாமல் பாமரரைப்போல நடந்துகொள்கின்றனர். அவர்கள் தமிழை வளர்ப்பவர்கள் அல்லர்! தங்களை வளப்பவர்கள்.......

3 comments :

Anonymous ,  August 25, 2013 at 5:26 AM  

They have made the politics as garbage,what's coming out from the garbage is true.

சோளன் ,  August 25, 2013 at 5:04 PM  

கொள்கையில்லாமல், கோட்பாடில்லாமல், சொந்தமாக அரசியல் பேச வசதியில்லாமல்…

ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணி என்ற இந்திய இராணுவத்தின் துணை அமைப்பாகச் செயற்பட்ட ‘விடுதலை இயக்கம்’த்தின் குறுக்குவெட்டு முகத்தைக் கண்டு அஞ்சிய போது அது இரண்டாகப் பிளவுபட்டு இரு நெடுக்குவெட்டு முகத்தோடு மக்களை அச்சுறுத்தியது. ஒன்று மண்டையன் குழு புகழ் சுரேஸ் பிரமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றது இந்திய உளவாளி வரதராஜப்பெருமாள் தலைமையிலானது. ‘ஈழ’ மார்க்சிஸ்டுக்களது ‘குலதெய்வம்’ ராமர் காட்டில் வாழ்ந்த காலம் பிள்ஸ்(+) நாலு வருடங்கள் இந்திய உளவுத்துறையின் தயவில் வாழ்ந்துண்டு, அந்தக் காலப்பகுதியில் தமது உறுப்பினர்களைப் புலிக்குப் பலிகொடுத்து கொழும்பு வந்திறங்கிய சீமான் வரதராஜப்பெருமாள். வரதராஜப்பெருமாளின் அணிக்கு பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் என்று பெயர். ‘அண்ணா’ தி.மு.க போல பத்மநாபா.! ஏதோ மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையில் பத்மநாபா ஒரு அங்கமாகிவிட்டது போல அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற அவமானத்தின் முன்னால் ஒட்டிக்கொண்டிருக்கிறார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்கு collection இற்கு பத்மநாபா அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. சட்ட மாமேதையும் நரேந்திர மோடியின் உள்ளூர் வேர்சனுமான விக்கியின் மேல்மட்டம் இதற்கு சம்மதித்திருக்க, முன்னை நாள் மகிந்த ராஜபக்சவின் மீன்பிடி அமைச்சு செயலாளர் சுரேஷ் தலையிட்டு கடைசி நேரத்தில் பத்மநாபா குழுவைக் கடாசி விட்டார். அதுவரைக்கு துணைக்குழு தலைவர் ‘தோழர்’ and கௌரவ டக்ளசை கனல் கண்ணால் பார்த்த பத்மநாபா குழு பின்னர் கண்ணீரோரு பார்த்தனர். டக்ளஸ் மனதில் ஏதோ தோன்றியிருக்க வெண்டும். ‘நான் இலங்கை ஆமியோடு சேர்ந்து செய்த அதே ‘விடுதலைப் போராட்டத்தை’ பத்மநாபா குழு இந்திய இராணுவத்தோடு சேர்ந்து செய்தனர் அதனால் ஒண்டுகை ஒண்டு என்று எண்ணியிருக்க வேண்டும். ஒரு சீட்டுக்காக நண்பனாகக் கருதப்பட்ட தமிழ் தேசியக் கூடமைப்பு எதியாகவும் எதிரியாகக் கருதப்பட்ட டக்ளஸ் குழு நண்பனாகவும் மாறி விட்டனர். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று ஆறுதலாக இருந்த நிலையில் கட்சியின் வேட்பாளர் மகிந்த கட்சியோடு சேர்ந்து வாக்குக் கேட்டு சுய மையாதையுடன் மக்களை வாழவைப்பேன் என்று வேறு தமாஸ் பண்ணுகிறார். ‘வீடில்லாமல், தொழில் இல்லாமல், மலசலகூட வசதியில்லாமல், பிள்ளைகளுக்கு சரியான கல்வியில்லாமல் ,அடிப்படையான மருத்துவ வசதியில்லாமல், மின்சாரம் இல்லாமல், சரியான, செப்பனான பாதை இல்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், குடிநீர் அன்னறாட தேவைகளுக்கு நீர் இல்லாமல் வாழ்பவர்களுக்காகவே நான் செயற்பட விரும்புகிறேன்.’ -என்றெல்லம் அச்சடித்து அறிக்கை வடித்துள்ளார். கொள்கையில்லாமல், கோட்பாடில்லாமல், சொந்தமாக அரசியல் பேச வசதியில்லாமல், பிள்ளைகளை முட்டாளாக்கி, அடிப்படை நேர்மையில்லாமல்,……. செயற்பட விரும்புகிறேன் என்பதை மாற்றி அச்சடித்து விட்டிருப்பார்கள் என்று சோளன் ஆறுதல்பட்டார். -சோளன்

Anonymous ,  August 31, 2013 at 7:27 AM  

One thing is sure more and more corrupted polluted ugly chicks will come out from their dirty political poultry farming.Political Hatcheries are already in around the peninsula

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com