நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் இணையத்தளம் திருடர்களின் கையில் சிக்கியுள்ளது! சிரிய படையின் செயலா?
ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமெரிக்கப்படைகள்!
ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கையை மீறி சிரியாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் இணையத்தளம் திருடர்களின் கையில் சிக்கியுள்ளது.
சிரியாவில் இரசாயான ஆயுத தாக்குதலில் அண்மையில் ஏராளமானோர் மரணமடைந்தனர். இத்தாக்குதலை கிளர்ச்சிப்படைகளே நடத்தியதாக சிரியா தெரிவித்திருந்த போதும், அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் அதனை மறுத்து, சிரிய அரசாங்கமே இரசாயன தாக்குதல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளன. இதனை அமெரிக்க உப ஜனாதிபதியும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
ஆனால் சிரியா மீது தர்க்குதல் மேற்கொள்வதற்காவே அமெரிக்கா இவ்வாறு குற்றஞ்சர்ட்டுவதாக சிரிய அரசாங்கம் ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன.
ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவு கிடைத்த பின்பே சிரியா மீது தர்க்குதல் நடத்த அமெரிக்க படைகள் தயாராகவிருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஏஹல் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருவதுடன் இத தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு நெதர்லாந்து ரஷ்யாவுடன் பேச்சுவர்ர்த்தை நடத்த தீர்மானிக்கப்ட்டது. அமெரிக்கர்வின் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததனால் அப்பேச்சுவர்ர்த்தை கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இது இவ்வாறு இருக்க அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான நியூயேர்ர்க் டைம்ஸின் இணைய தளம் தரவுகளை திருடுவோரின் கையில் சிக்கி அதன் தரவுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சிரியா மீது அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவோ இதனை சிரிய படைகளின் செயல் என தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் நியூயோர்க் டைம்ஸின் இணையத்தளத்தின் தரவுகள் மாற்றப்பட்ட 2 வது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் வொஷின்டன் போஸ்ட் மற்றும் சி.என்.என். இணையத்தளங்களின் தரவுகள் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment