ஜனாதிபதியை பாராட்டிய நவநீதம் பிள்ளை
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பும் பேச்சுவார்த்தையும் நேற்று(30.08.2013) அலரி மாளிகையில் நடைபெற்றதுடன், அலரி மாளிகையைப் பார்க்க வந்திருந்த பாடசலை மாணவர்களையும், நவநீதம் பிள்ளை சந்தித்து இலங்கையின் சுதந்திரக் கல்வி பற்றி உரையாடினார்.
நவநீதம் பிள்ளையுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனர்வாழ்வு, மீள்நிர்மாணம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை தன்னால் கண்டுக்கொள்ள முடிந்ததாக நவீபிள்ளை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிற்கு சென்று மக்களை சந்தித்ததுடன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதுடன், புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலான உங்களுடைய நோக்கத்தை நான் மதிக்கின்றேன் என்று தெரிவித்துள்ள நவீபிள்ளை, நிலையான கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமன்றி மக்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் புனர்நிர்மானத்தை உறுதிப்படுத்தவேண்டும். அதற்காக தேவையான சட்டங்கள் இயற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக குழு நியமிக்கப்பட்டது தொடர்பிலும் காணாமல் போனதை குற்றமாக கருதி சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளையும், அவர் வரவேற்றுள்ளதுடன் சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதொன்றல்ல என்றும் திடிரென நடைபெறும் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 comments :
She would have given a good advise to the tna about their racial hatred political trump card.tna is the main cause for the "Racial Hatred" inside the country.Hon president is not the person to carry the racial hatred poo on his shoulder.
Post a Comment