Wednesday, August 28, 2013

வரப்பிரசாதங்களை அறுவடை செய்து கொண்டு நாடு திரும்பினார் மஹிந்த!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஞாயிறு அன்று பெலாரஸ் நாட்டிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். ஜனாதிபதி தலைமையிலான தூக்குழுவி னர் பெலாரஸின் மின்ஸ் விமான நிலையத்தில் அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விளாடி மீர் மகேவினால் வரவேற்கப்பட்டனர்.

இரு நாடுகளின் நட்புறவை பலப்படுத்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பெலாரஸ் ஜனாதிபதி அலக்ஸாண்டர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவர்ர்த்தை இடம்பெற்றது.

பெலாரஸ் ஜனாதிபதியின் உத்தியேகபூர்வ வாசஸ்தளத்தின் எதிரில் இராணுவ அணி வகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி அலக்ஸாண்டன் லுக்க சென்கோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்றார். இதனையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இருபக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததுடன் வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, கல்வி, மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இப்பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இரு நாட்டின் தலைவர்களுக்கு முன்னிலையில் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவமளிக்கும் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமை இச்சந்திப்பின் முக்கிய அம்சமாகும். வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், இராஜதந்திர மற்றும் உத்தியேகபூர்வ கடவுச்சீட்டுகள் உள்ளோர் விசா இன்றி பயணம் செய்தல், குற்றங்கள் தொடர்பான விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பான பிரகடனம் நீதித்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையில் இரட்டை வரிவிலக்கு, சுற்றுலா துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு துறையில் தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இங்கு கைச்சாத்திடப்பட்டன.

பெலாரஸ் பிரதமர் பேராசிரியர் மிஹாயில் மியஸ் நிக்கோவிச் உடன் ஜனாதிபதி மேற்கொண்ட பேச்சுவார்த்தையானது இலங்கையும் பெலாரஸூம் இணைந்து வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுப்பதற்கான பல வாய்ப்புக்கள் ஏற்படுத்தியது.

இலங்கை மாணவர்கள் 250 பேருக்கு பொலாரஸ் பல்கலைக்கழகத்தில் இலவசமாக கற்கை நெறிகயை மேற்கொள்வதற்காக இணக்கப்பாடும் இதன் போது எட்டப்பட்டது. இப் பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி மின்ஸ்க் தேசிய நூலக மண்டபத்தில் இலங்கை பெலாரஸ் வர்த்தக பேரவையின் ஆரம்ப நிழக்விலும் கலந்து கொண்டார்.

இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்புகள் தொடர்பாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இங்கு தெளிவுப்படுத்தினார். இரு நாடுகளுக்கு இடையிலான முதலீடு தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பெலாரஸ் அரச மாளிகையில் இடம்பெற்ற இலங்கைக்கும் பெலாரஸிற்கும் இடையில் பாராளுமன்ற ஒத்துழைப்பை கட்டியெழுப்பி பாராளுமன்றங்களுக்கு இடையிலான சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

பெலாரஸ் தேசிய மேல் சபையின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் விளாடி மீர் அந்திரேவென்கோ மற்றும் தேசிய மேல் சபையின் மக்கள் கவுன்சிலின் பிரதி தலைவர் எனட்டோலி ருசெட்ஸ்கி, ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதனையடுத்து 2 ஆம் உலக மகா யுத்தத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் இராணுவ தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார். கனரக வாகனங்கள் மற்றும் டெக்டர் உற்பத்தி செய்யும் 2 தொழிற்சாலைகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். இதனையடுத்து 3 பெலாரஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட ஜனாதிபதி தலைமையிலான குழு இன்று தாயகம் திரும்பியது.

No comments:

Post a Comment