Wednesday, August 7, 2013

சங்கரி இலட்சங்களுக்கு சீட்டு விற்ற ஆட்கடத்தல்காரனின் மறுமுகம் தெரியுமோ?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் உருவான சர்ச்சை தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஒட்டுண்ணிக் கட்சிகளுக்கு வேட்பாளர் பட்டியல் ஒதுக்கீட்டில் 5 இடம் கிடைத்தது என்றால் மிகையாகாது.

கடந்த தேர்தல்களில் 80 விழுக்காடு பட்டியல் தமிழரசுக் கட்சியால் நிரப்பப்பட்டு மிகுதி கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தமையும் தமிழரசுக் கட்சியே தலைமைக் கட்சி என்றும் ஏனைய கட்சிகள் விரும்பினால் இருக்கலாம் என்ற நிலையும் மாறி நடைபெறவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி சுரேஸ் அணிக்கு 12 ஆசனங்கள் ரெலோவுக்கு 12 ஆசனங்கள் புளொட்டுக்கு 5 ஆசனங்கள் த.வி.கூட்டணிக்கு 5 ஆசனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

நெல்லுக்கிறைத்த நீர் வாய்கால்வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசிந்த கதையாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த ஆசன ஓதுக்கீட்டை சரியான தருணத்தில் பயன்படுத்தாவிட்டால் என்கதி அதோ கதிதான் என சங்கரி ஆசனங்களில் ஒன்று இரண்டை விலைக்கு விற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது.

ஆனால் சங்கரி பணம் வாங்கினாரா? இல்லையா? என்பதை நாம் கட்டியம் கூற வரவில்லை. சில்மிசச் செல்வன் சங்கரிக்கு கிடைக்கப்பெற்ற 5 வேட்பாளர் ஒதுக்கீட்டில் சங்கரியால் கிளிநொச்சி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தம்பி எனப்படுகின்ற தம்பிராஜாவின் மறுமுகம் தமிழ் மக்களுக்கு நிச்சயம் அருவருப்பை தரத்தக்கதும் பொருத்தமற்றதும் என்பதே விடயம்.

இந்தவிடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது. தம்பியின் பின்புலத்தை சங்கரி கருத்தில் எடுக்கவேண்டும். இவ்வாறான ஓர் சர்ச்சைக்குரிய நபரை வேட்பாளராக நிறுத்துகின்றபோது ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அக்கட்சி தெரிவித்திருக்கின்றது. ஆனால் சங்கரி இது மண்டையன் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடமல்ல தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கப்பட்ட இடம் அதை யாருக்கு வழங்குவது என்பது எனது முடிவு என்றுள்ளார்.

காரைநகர் களபூமியைச் சேர்ந்த தம்பி ஒரு ஆட்கடத்தல்காரன். வெளிநாடு அனுப்புவதாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தினை ஏமாற்றியவன். புலிகளுக்கு கொழும்பில் வேலை செய்வதாக கோடிக்கணக்கான பணத்தினை வாங்கிவிட்டு புலிகளுக்கு கம்பி நீட்டியவன். புலிகள் அடிவாங்க தொடங்கியதும் கனடாவிற்கு சென்று அங்கு தன்னிடமுள்ள கோடிக்கணக்கான பணத்தை காட்டி கனடாவில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டவன்.

தம்பியிடம் பணம் கொடுத்த ஒரு சில புலிகள் அந்தப் பணத்தை மீண்டும் பெற முற்பட்டபோது அவர்கள் எவ்வாறு இலங்கை இராணுவத்திடம் மாட்டிவிடப்பட்டார்கள் என்பது பரம இரகசியம். கொழும்பில் தம்பியின் கால் படாத சூதாட்ட நிலையங்கள் இல்லை என்று கூறலாம்.

இதற்கும் அப்பால் சுவாரசியமான விடயம் யாதெனில் வன்னியில் புலிகளிடம் பணத்தினை வாங்கி கொழும்பில் தனது பாதுகாப்புக்காக ஈபிடிபி க்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தவன்.

இப்பேற்பட்ட கடைந்தெடுத்த கழிவை சில்மிசச்செல்வன் சங்கரி தமிழ் மக்களின் பிரதிநிதியாக்க முனைந்திருக்கின்றார். தம்பிக்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக என்ன தகைமை இருக்கின்றது, தம்பியின் பின்புலம் அருவருக்கத்தக்கதே என சங்கரியிடம் கேட்கப்பட்டபோது, தம்பி தேர்தலுக்கு 1 கோடி ரூபா செலவழிப்பான் என கூறினாராம் சில்மிசச்செல்வன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு எதற்கு பணம்? வழமைபோல் உணர்ச்சி ஊட்டும் தேர்தல் விஞ்ஞபனம் ஒன்றை எழுதி வெளியிட்டால் போதுமே மந்தைக்கூட்டம் விடிந்தெழும்பி கண்ணை கசக்கி கொண்டு போய் வீட்டுக்கு கீறீப்போட்டு வரும்தானே.

(சுழியோடி

4 comments :

கரன் ,  August 7, 2013 at 9:33 PM  

தம்பி சுழியோடி இதெல்லாம் சர்வசாதாரணம் அப்பா. இருக்கின்ற கள்வர்களுடன் மேலதிகமாக ஒரு கள்ளன் . இதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. விக்னேஸ்வரன் வெல்வது நி்ச்சயம் அதற்கு பிறகுதான் பாருங்கோ விடயமே இருக்கின்றது. இந்த கள்வர்களை இந்த மனி்சனலால் மேய்க்க முடியுமா..

Anonymous ,  August 7, 2013 at 11:49 PM  

சங்கரி கிளிநொச்சியில் தம்பியை இறக்கவில்லை யால்பானத்தில்தான் இறக்கிறார் ஏனென்றால் கூட்டமப்புக்குசனம் வாக்கு போடாமல் விட்டால் மகிந்த மனங்குளிரும் இப்படித்தான் கடந்தமுறை திருகோணமலையில் ஒருத்தரைபோட்டு கம்பிஎன்னவைத்து மகிந்தவுக்கு மன்க்குளுத்தி செய்தவர்

Arya ,  August 8, 2013 at 1:21 AM  

இந்த செய்தி உண்மையாக தான் இருக்க வேண்டும், சங்கரியின் சகா குடு முஸ்தபாவின் TBC யும் இதை தெரிவித்து உள்ளது , பார்க்க: http://www.tbclondon.com/2013/08/06/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-50%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81/

புலிகளின் காலத்தில் நிதர்சனம் இணையம் இந்தாளை பற்றி எழுதியது எல்லாம் உண்மை போல் தான் உள்ளது , சில்மிசச்செல்வன் சங்கரி இளவயது குமரிகளுடன் சில்மிஷம் செய்யத்தான் அடிகடி தமிழ் நாடு செல்வதாக நிதர்சனம் ஊத்தை சேது குறிப்பிடிருந்தான் , இந்தாள் தன் உயிரை காத்த படையினருக்கு என்றாவது நன்றி தெரிவித்துள்ளாரா ?

Anonymous ,  August 8, 2013 at 3:21 PM  

He and and his partners belong to the birds of the same feather.They would fly together.The voters must be cautious.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com