பஸ் நடத்துனர் மீது யாழில் கல் வீச்சு
அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் ஒன்றின் நடத்துனர் ஒருவர் யாழில் இன்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.தனியார் பஸ் நடத்துனர்கள் சிலர் இவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தை கண்டித்தும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைதுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தி அரச பஸ் பணியாளர்கள் யாழில் இன்று பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்ததுடன் தொடர்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தரும் வரை தாங்கள் பணி பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அரச பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப் பணிப் பகிஷ்கரிப்புக் காரணமாக வெளிமாவட்டத்திற்குச் செல்லும் பயணிகள் பேரூந்து சேவையின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
0 comments :
Post a Comment