வெளியாகியது மாகாணசபைத் தேர்தல் திகதி!
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களம் இன்று(01.08.2013) வியாழக்கிழமை நண்பகலுடன் வடக்கு மாகாணசபை மற்றும் கலைக்கப்பட்ட இரண்டு மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததையடுத்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் அறிவித்தார்.
0 comments :
Post a Comment