பொண்டேரா உற்பத்திகளுக்கு இலங்கையிலும் தடை!
Whey Protein மோர் புரதத்தினுள்ளே க்ளோஸ்ட்ரிடியம் பொடலீனம் பக்ரீரியா உள்நுழைகின்றது என்ற செய்தி பரவிக் கொண்டிருப்பதால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற Whey Protein மோர் புரதமும் ஏனையனவும் அடங்கியுள்ளதெனக் கருதப்படும் பால்மா உற்பத்திகள் (Anchor, Anchor 1, Diamond and Maliban Non Fat milk powder)துறைமுகத்திலிருந்து இறக்கப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் முடிவுசெய்துள்ளார்.
இதுவிடயத்தில் இரசாயன ஆய்வினை உடனடியாக மேற்கொள்வதற்கும் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதுதொடர்பாக நிவ்ஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பால்மாப் பொருட்களும் துறைமுகத்திலிருந்து வெளிச்செல்லாதிருக்கச் செய்யவும் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால இன்று முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கின்ற Whey Protein மோர் புரதத்தை சந்தையிலிருந்து நீக்கிவிடவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த மோர்ப் புரதம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் அனைத்துப் பால்மாப் பொருட்களுக்குமான ஆய்வு நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் வீணாகப் பயப்படத் தேவையில்லை எனக் குறிப்பிடுகின்ற சுகாதாரத் திணைக்களம் இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள பால்மாவினுள் Whey Protein எனும் மோர் புரதம் உள்ளடங்குவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடுகிறது.
என்றாலும், பாதுகாப்பின் நிமித்தம் சிறுவர்களுக்கான பால்மாவினையும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் பணித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா தொடர்பில் மேலெழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சுகாதாரத் திணைக்களம் விசேட கவனம் செலுத்திவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமகன் பைரூஸ்)
http://www.colombopage.com/archive_13B/Aug05_1375714037KA.php
0 comments :
Post a Comment