இலஞ்சம் தருமாறு வாஸ் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்! - சிங்கப்பூர் சரத்
களனித் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹஸித மடவலையின் கொலையுடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபரான சிங்கப்பூர் சரத் எனப்படுகின்ற சரத் எதிரிசிங்க என்பவர் அரச தரப்பு சாட்சியாளராக நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
அவர் குற்றப்புலனாய்வுத் துறையினரிடம், ‘வாஸ் குணவர்த்தன நான் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் வைத்திருப்பதாக கூறி எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். கொலை அச்சுறுத்தல் விடுக்காமலிருக்க வேண்டின் குறித்ததொகை இலஞ்சப் பணத்தைத் தர வேண்டும் என வாஸ் குணவர்த்தன குறிப்பிட்டதாக சரத் எதிரிசிங்க என்பவர் குறிப்பிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தின் முன் குறிப்பிட்டனர்.
விடயங்கள் அனைத்தையும் பரிசீலித்த மஹர பிரதான நீதிபதி தர்சிக்கா விமலசிரி, வழக்கினை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுப்பதாகக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் நீதிமன்றத்திற்கு வெளியே கருத்துத் தெரிவித்த வழக்கறிஞர் அஜித் பதிரன,
‘வாஸ் குணவர்த்தன இந்நாட்டிலிருக்கின்ற குற்றவாளிகளுக்கு எதிராகச் செயற்பட்ட, குற்றவாளிகள் மேலும் எழாதிருக்க அவர்களை நிருவாகித்த சிறந்ததொரு அதிகாரி. இவ்வாறானதொரு சிறந்த அதிகாரிக்கு, வாஸ் குணவர்த்தனவினால் சட்டத்தின் முன் வழக்குத் தொடரப்பட்டுள்ள குற்றவாளிகளால் அவருக்கு எதிராக பொய் முறையீடு செய்வதற்குரிய சாத்தியக் கூறுகள் உள்ளன. அவ்வாறானதொரு பொய் முறையீடாக இதுவும் இருக்கலாம். அவ்வாறானதொரு முறையீட்டை கருத்திற்கொண்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செய்துவருகின்ற இந்த ஒழுங்கற்ற செயற்பாடு மிகவும் அநீதியானது என்பதே எனது கருத்து’ என்று குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment