ஆயுர்வேதம் என்ற பெயரில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பிக்கு கைது!
தம்மிடம் ஆயுர்வேத சிகிச்சை பெற வந்த சிறுமியொருத்தியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அநுராதபுரம், மதவாச்சிய பகுதி விகாரையொன்றின் பௌத்த துறவியொருவர் இம்மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத வைத்தியம் செய்யும் இவர், குறித்த தினத்தன்று சிகிச்சைக்காக சிறுமியை அழைத்து வந்த தாயை வெளியே நிற்கும் படி கூறி, உள்ளே சிறுமியை மட்டுமே அழைத்து வல்லுறவுக்கு உட்படுத்தியவேளை சிறுமியின் அலறலைக் கேட்டு ஓடிவந்த தாய் பொலிஸாரையும் அழைத்து முறைப்பட்டிருக்கிறார்.
பாலியல் சேட்டைக்குட்படுத்தப்பட்ட தாயின் முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரான பிக்கு (வைத்தியர்...?) கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
(கேஎப்)
1 comments :
This Monk is only the "TIP OF ICEBERG"
Post a Comment