விகாராதிபதிக்கு நிர்வாணத்தை காட்டிய பெண் கைது!
பாணந்துறையிலுள்ள விகாரையொன்றின் விகாராதிபதி யான பெளத்த பிக்கு ஒருவருக்கு தமது நிர்வாணத்தை காண்பித்த பெண்ணொருவரை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை கல்கொடவில விகாரைக்குச் செல்லும் வீதிக்கு உரிமை கோரி இப்பெண், விகாராதிபதியான பொத்துபிட்டிய பஞ்சசீல தேரரின் காவியுடையை பிடித்து தாக்க முயற்சி மேற்கொண்டுள்ளதுடன் தமது உள்ளா-டையைக் களைந்து தமது நிர்வாணத்தைக் காட்டி விகாரையில் பண்பற்ற முறையில் நடந்து கொண்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விகாராதிபதியும் விகாரையின் நிர்வாகக் குழுவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணை நீதிமன்றின் முன் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து நீதவான், அப்பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு பாணந்துரை நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment