ஐ.ம.சு.மு. வேட்பாளர்கள் யாரும் அரச சொத்துக்களை தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடாது-சுசில் பிரேம ஜெயந்த்
ஐ.ம.சு.மு. வேட்பாளர்கள் அரச சொத்துக்களை பாவிக்கவோ தேர்தல் சட்டங்களை மீறவோ கூடாதென எச்சரிக்கப்பட்டுள்ளதுட்ன் தேர்தல் சட்டத்தை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ம. சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக்குறிப்பிட்டார்.
எமது வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் விடுமுறை பெற்றே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பணிக்கப்பட்டுள்ளதுடன் அரச வாகனங்களை ஒப்படைக்கவும் அவர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.
இது மட்டும்லாது முன்னாள் முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் போன்றோருக்கும் தமது வாகனங்களை கையளிக்குமாறு அறிவித்துள்ளோம் அது மட்டுமல்லாது தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் எமக்கு கடிதம் மூலம் அறிவித்து வருகிறார் அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக்குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment