நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தி, நாட்டை அராஜகத்திற்கு இட்டுச்செல்லும் புலம்பெயர் தமிழர்களின் சூழ்ச்சிக்கு, வெளிநாடு சென்று ஆதரவு வழங்கும் நோக்கில், இலங்கையின் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவொ ன்று, லண்டன் நோக்கி பயணமாகியுள்ளது.
தமிழீழ நிழல் அரசாங்கத்தின் தலைவரென கூறிக்கொள் ளும் வீ. உருத்திரகுமார் என்பவரின் நாட்டுக்கு வெளியிலான தமிழீழ ராச்சிய செயற்பட்டறையில் கலந்து கொள்வதற்காக, நாட்டுக்கு எதிரான பல்கலைக்கழக விரிவுரையாளர் குழு, லண்டன் நோக்கி பயணமாகியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், லண்டன் சென்றடைந்துள்ளதாக, புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பேராசிரியர் ஏ. சண்முக தாசன், இதன் தலைவராக செயற்படுவதோடு, இதனை பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ரீ. மனோகரன் வழிநடாத்துகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை வலய கல்வி அதிகாரி சிவலிங்கம் சிவநீர்த்தநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர். வீ. பிரன்ஸிஸ் ஆகியோர், நாட்டுக்கு வெளியிலான தமிழீழ ராச்சியத்தின் நாட்டுக்கு எதிரான சூழ்ச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, லண்டன் சென்றுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் அன்புச்செல்வி ஸ்ரீதரன், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மார்க் ரூபவஹனன் போன்றோர் லண்டன் சென்று, இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
புலம்பெயர் தமிழர்களின் நேரடி தலையீட்டுடன், உருத்திரகுமாரினால் வழிநடாத் தப்படும் இந்த மாநாட்டின் நோக்கம், இலங்கைக்கு எதிராக சர்வதேச ரிதியில் கடுமையான நிலைப்பாட்டை கட்டியெழுப்புவதாகும். இதற்காக புத்திஜீவிகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதும், இதன் நோக்கமாகும்.
இந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கடமை விடுமுறையை பெற்றுக்கொண்டு, லண்டனில் ஆய்வு நடாத்துவதாக கூறிக்கொண்டு, லண்டன் சென்றுள்ளனர். போலியான காரணங்களை காட்டி, விடுமுறைகளை பெற்றுக்கொண்டு, நாட்டுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடுகளில் கலந்து கொள்வது, நாட்டின் தற்போதைய சட்டதிட்டங்களின்படி, கடுமையான குற்றமாகுமென, சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment