காவியுடை களைந்து இராணுவத்தில் இணைவேன்! - ஞானஸாரர்
அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுவது போல, பொதுபல சேனா இயக்கம் ஒரு முஸ்லிம் நபருக்கு, முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றுக்கு அல்லது முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல், அல்லது அச்சுறுத்தல் விடுத்திருப்பதை நிரூபித்தால் தாம் மகியங்கனையிலுள்ள விகாரைக்குச் சென்று தனது காவி உடையை களைந்துவிடுவதாகவும், அதன்பின்னர் இராணுவத்தில் இணைந்துவிடுவதாகவும் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நிரூபிக்காவிடின், அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்திலிருந்து இருந்து விலக வேண்டுமெனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளாரர். ‘இவ்வாறு பொய்கூறும் உறுப்பினர்களுக்கு இனிமேலும் வாக்களிக்க வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மகியங்கனையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment