அன்று புலிகள் சிறுவர்களை இயக்கத்தில் இணைத்தனர்! இன்று த.தே.கூ புலமை பரிசில் மாணவர்களை தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்கிறது
தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் தேர்தல் ஆணையாளரின் ஆணையை மீறி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாடசாலை மாணவர்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற 5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு நேற்றிரவு 8 மணி முதல் இன்று பிற்பகல் 2 மணி வரை மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்றைய தினம் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் அறிவித்தியிருந்தார்.
எனினும் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இவ் உத்தரவை மீறி யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் பரீட்சை முடிவடைந்து வெளியேறிய மாணவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, அவர்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தூண்டியுள்ளனர்.
வாகனம் ஒன்றில் பாடசாலையை நோக்கி வந்த குறித்ததொரு வேட்பாளர் இதில் ஈடுபட்டதாகவும் மாணவர்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
0 comments :
Post a Comment