ஒன்றும் அறியாத சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கும் தலிபான்கள்! வீடியோ இணைப்பு
ஒன்றும் அறியாத சிறுவர்கள் கையில் துப்பாக்கிகளை தந்து தலிபான்கள் பயிற்சி வழங்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் பிரசாரத்திற்காக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் சாதாரண துப்பாக்கி முதல் கனரக துப்பாக்கி வரை சிறார்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த வீடியோவில் சிறுவன் ஒருவர் சிரித்தபடி துப்பாக்கி பயிற்சி பெறுகிறான். அவனுக்கு தலிபான் தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியைப் பிடிப்பது எப்படி, சுடுவது எப்படி என்று பயிற்சி தருகிறார்.
மேலும் பெண்களும் கனரக ஆயுதங்களுடன் பயிற்சி பெருவதை அந்த வீடியோவில் பார்க்கமுடிகிறது. பெண் ஒருவர் தனது கையில் ராக்கெட் மூலம் ஏவப்படும் கிரேனெடை வைத்திருக்கிறார். அதை ஒரு கார் மீது செலுத்தி வெடிக்க வைக்கிறார்.
மேலும் பள்ளிப் பருவத்தில் உள்ள பல சிறுவர்கள் வரிசையாக உட்கார்ந்தபடி ஏ.கே. 47 துப்பாக்கியை கையாளும் பயிற்சியில் ஈடுபடும் காட்சியும் இதில் வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வசிரிஸ்தானில்தான் இந்தப் பயிற்சி முகாம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment